Gistak Media – Cinema News | Trending News | Latest News

மசாலா பொருட்களில் முக்கிய பங்கு பெறும்  இஞ்சி - ஆரோக்கிய நன்மைகள்

மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மசாலாப் பொருள் இஞ்சி. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தரும் ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.

இஞ்சியில் மனித உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.  வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் வைட்டமின் B காம்ப்ளக்ஸ் ஆகியவை இஞ்சியில் உள்ளன. மேலும்  இஞ்சியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான், சோடியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற தாதுக்களும் உள்ளன, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சியில் உள்ள  இவை அனைத்தும்  உதவுகின்றன.

இஞ்சி ஆனது ஆன்ட்டி ஃப்பன்ங்கஸ் ( Anti fungus ) , ஆன்ட்டி செப்டிக் (  Anti Septic ), ஆன்ட்டி பயோடிக் (   Anti Biotic )  மற்றும் ஆன்ட்டி வைரல் ( Anti Viral ) பண்புகளைக் கொண்டுள்ளது.  மற்றும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சித் தோலில் நன்மை பயக்கும் பாலிபினால்கள் சதை மற்றும் முக்கியமாக தனித்துவமான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணி ஆகும். இஞ்சியின் பயன்கள்  கீழ்வருமாறு 

  • தொண்டை வலியை நீக்குகிறது மற்றும் தொண்டைக்கு இதமளிக்கிறது.
  • இருமலை குறைக்கிறது. இஞ்சியில் உள்ள  ஆன்டிவைரல் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகளின் காரணமாக, ஐலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கிறது.
  • கொழுப்பின் அளவை பராமரிக்கிறது மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்கிறது.
  • செரிமானத்தை அதிகரிக்கிறது.
  • சோம்பலை நீக்குகிறது.
  • வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியைக்  குறைக்கிறது.
  • இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
  • இதயம் தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்கிறது.
  • புற்றுநோய் செல்களை நீக்கி புற்றுநோய் ஆபத்தை  தடுக்கிறது.
  • பெண்களின் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியைக் குறைக்கிறது. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள், பெண்களின் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • எடை இழப்புக்கு உதவுகிறது.
  • வீக்கத்தை குறைக்கிறது.
  • சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ஜிஞ்சரோல்கள் ஆனது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி  ஒரு சீரான தொனி மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. மேலும் இது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதை இறுக்கமாக்கி, வயதான மற்றும் பல்வேறு அறிகுறிகளை எதிர்த்துப் போராட  உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இஞ்சி - Platform Tamil

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற முக்கிய கூறு முழுமையான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இஞ்சி தண்ணீரை தினமும் குறைந்தபட்சம் ஒரு கிளாஸ்குடித்து வந்தால் ஜீரண மண்டலம் பலப்படும். உணவு நீண்ட காலத்திற்கு இரைப்பைக் குழாயில் இருக்காது. அஜீரணக் கோளாறை தடுக்கும், குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.

இஞ்சியில் உள்ள கோலின் என்ற கூறு மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான வளர்சிதை மாற்றம், மனநிலை மற்றும் தசை செயல்பாடு ஆகியவற்றை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குமட்டலை குறைக்கிறது. இஞ்சியில் உள்ள உட்பொருள்கள் மூளையின் நரம்பு செல்கள் அழியும் செயலை தடுக்கிறது.  மூளையில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை இஞ்சியில் உள்ள இன்பிளமேட்டரி பண்பு எதிர்த்துப் போராடுகிறது.

மூளை செயல்பாடுகளில் இஞ்சி நேரடி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்  மற்றும் மூளையில் ஏற்படக்கூடிய அழற்சி எதிர்விளைவுகளை இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எதிர்க்கும். இஞ்சியில் உள்ள பயோ – ஆக்டிவ் மற்றும் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் வயதானவர்களுக்கு  ஏற்படும் சின்ன சின்ன ஞாபக மறதி பிரச்சினையைத் தீர்க்கக் கூடியது  மற்றும் வயதாகும் போது உண்டாகிற மறதி நோயான அல்சைமர் உண்டாவதைத் தடுக்கிறது.

தசைகளை சோர்விலிருந்து உடனடியாக நீக்கி, உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இஞ்சி தண்ணீர் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும்  உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய  இஞ்சி உதவுகிறது. இதனால் சிறுநீரகக் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க உதவுவதோடு நீரிழிவையும் நீரிழிவால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்க்க உதவுகிறது. தினமும் இஞ்சியை உலர்ந்ததாகவோ, பொடியாகவோ அல்லது எண்ணெய் அல்லது சாறாகவோஉள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top