குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை
உலகில் முதன் முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேராசிரியர் மாசிமோ கபுடோ” அவர்கள் சிகிச்சை செய்தார். ஸ்டெம் செல்களானது குழந்தை பிறக்கும் போது இருக்கும் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல்கள் காணப்படும். இந்த ஸ்டெம் செல்களை பயன்படுத்தி உலகிலேயே முதன்முறையாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வாய்ப்புள்ளதாக இதய சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேரரசியர் “மாசிமோ கபுடோ” குழந்தை ஃபின்லியின் இதய குறைபாட்டை சரிசெய்வதற்காக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சிகிச்சை செய்தார். இதய நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாமல் இருக்க ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தை கொண்டுவர விரும்பினார். தற்போது இரண்டு வயது ஆகும் ஃபின்லி பிறந்தபோது இதயத்தில் உள்ள தமனிகள் தவறான வகையில் அமைந்திருந்தன. குழந்தை பிறந்த 4 நாட்களிலேயே குழந்தைக்கான பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சையானது பிரச்சனையை தீர்க்கவில்லை ஃபின்லியின் இதய குறைபாடானது மிகவும் மோசமாக ஆனாது. ரத்தஓட்டம் இல்லாமல் போனதால் இதயத்தின் இடது பக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வில்ட்ஷயரில் உள்ள கோர்ஷாமை சேர்ந்த அவனது தாயார் மெலிசா, குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என தங்களுடைய மனதை திடப்படுத்திக்கொண்டார்.
12 மணிநேரத்துக்கு பிறகு ஃபின்லி இறுதியாக அறுவை சிகிச்சை முடிந்து கொண்டுவரப்பட்டான். அவன் உயிருடன் இருக்க இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பைபாஸ் இயந்திரம் தேவைப்பட்டது. அவனுடைய இதயம் மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து தொப்புள் வங்கியிலிருந்து ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “கபுடோ” அவர்கள் சிகிச்சை செய்து மோசமடைந்து இதயத்தை சரி செய்தார். சேதமடைந்த ரத்த நாளங்களை பழைய நிலைக்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் பழைய நிலைக்கு திரும்பினான். ஸ்டெம் செல்களானது பல்வேறு விதமான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என பேராசிரியர் மாசிமோ கபுடோ அவர்கள் கூறினார்.






