-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
ஐபிஎல் 2023: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை - முழு விவரம்
வருகிற மார்ச் 31 ஆம் தேதி மாலை ஐபிஎல் 2023 போட்டி நடைபெறஉள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் போட்டி ஆனது அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது .இந்த ஆண்டு ஐபில் போட்டி விளையாடவுள்ள 10 அணிகள் ஐபிஎல் 2023-ல் போட்டியில் பங்குபெறுகினர். இதில் சென்ற ஆண்டில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.
இதை போல முதல் முறையாக கடந்த ஆண்டு சென்னை அணி மற்றும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐபில் போட்டியில் வெளியேறியது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 31 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாலை 7.30 மணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத் மைதானத்தில் விளையாடவுள்ளது.
அடுத்த மாதம் இதே நாளில் ரசிகர்கள் மட்டும் இல்ல , தோனியின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் லக்னெள் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இடையே போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கான ஒத்திகையை தற்போதே சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளார் தல தோனி. ஐபிஎல் 2023வது சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன. அது மட்டும் இல்லமால் அணியின் கேப்டனாக தல தோனி இருப்பதால் சிஎஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிலும் விசில் சத்தம், ஆராவரத்துடனே இருக்கும். அத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் கிரிக்கெட் மட்டும் விளையாட வந்த நிலையில் ஐபிஎல் 2023 சீசன் அவரது கடைசி தொடராக இருக்கும் என கூறப்படுகிறது..
இப்படி ஒரு சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மூன்று சீசன்களுக்கு பிறகு இந்த முறை வழக்கமான பாணியில் ஹோம் – அவே பார்மெட்டில் நடைபெறுகின்றது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் 1,427 நாள்களுக்கு பிறகு சென்னை அணி விளையாடும் போட்டி என கருதப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதும் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னை வந்த நிலையில் அணியில் இணைந்துள்ளார். ஐபிஎல் 2023 போட்டிக்கு தயாராகும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று தோனி பயிற்சி மேற்கொண்டார்.
அவருடன் அஜிங்கியா ரஹானே,மற்றும் ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, சுப்ரன்ஷு சேனாபதி உள்ளிட்ட வீரர்கள் அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டர்கள் .முன்னதாக தோனி சென்னை வந்து சேர்த்தார்








