Gistak Media

35 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் "கரகாட்டக்காரன் 2"

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 80களில் டாப் நடிகராக இருந்தவர் “ராமராஜன்” ஆவர். இவர் நடித்த படம் ‘கரகாடக்காரன்’ திரைப்படம் 1989ஆம் ஆண்டு வெளியானது. கிராமத்து மண்வாசனியில் உருவான இந்த படத்தை இயக்குனர் கங்கை அமரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கனகா, கவுண்டமணி, செந்தில், சந்தான பாரதி, கோவை சரளா, வடிவுக்கரசி, வைகை சந்திரசேகர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இப்படம் வெளியானது. கரகாட்டக்காரன் சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இளையராஜாவின் இசையில் வரும் ஒவ்வொரு பாடலும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

இளையராஜா இசையமைத்த பாடல்களும், கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நகைச்சுவையும் கரகாட்டக்காரன் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மிக எளிமையான கதைக்களத்தை வைத்து கங்கை அமரன் மிகச்சிறப்பாக திரைக்கதை மற்றும் மேக்கிங் செய்திருந்தார். ஜூன் 1989 இல் வெளியான இப்படம் 400 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவை பற்றி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘கரகாட்டக்காரன் 2’ உருவாக உள்ளது, “காரகாட்டக்காரன்” முதல் பாகத்தை இயக்குனர் கங்கை அமரன் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை அவரது மகன் வெங்கட் பிரபு இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் (ராமராஜன்) மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். முதல் பக்கத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில்,ம் கோவை சரளா ஆகியோர் இரண்டாம் பக்கத்தில் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க உள்ளார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top