Gistak Media – Cinema News | Trending News | Latest News

புனித குரானை மனப்பாடம் செய்து 4 மாதங்களில் கையால் எழுதிய காஷ்மீரி பெண்

கையெழுத்து எழுதுவதில் ஆர்வம் கொண்ட இளம் காஷ்மீரி பெண் புனித குரானை மனப்பாடம் செய்து நான்கு மாதங்களில் கையால் எழுதியுள்ளார். குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த காஷ்மீரி பெண்ணான 22 வயதான கல்லூரி மாணவி சலீமா  இஸ்லாமிய புனித நூலான “குரானை” கையால் எழுதியுள்ளார். சலீமாவுக்கு புனித நூலை எழுதி முடிக்க நான்கு மாதங்கள் பிடித்தன. அந்த புனித நூலை  முதலில் மனப்பாடம் செய்து, பின்னர் கையால் எழுதியுள்ளார்.

அவர் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு மட்டுமல்ல, முழு காஷ்மீர் பகுதிக்கும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார். தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த எழுத்தர் ஒருவர் இஸ்லாமிய புனித நூலான “குரானை” கையால் எழுதியுள்ளார்..

எப்போதும் அவரது ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரால் சலீமாவின் கையெழுத்து ஆனது பாராட்டப்பட்டு வந்ததால் அவருக்கு புனித நூலை எழுதும் எண்ணம் வந்தது. சலீமாவின் கைரேகைக் கலை ஆனது மிகவும் அற்புதம் ஆகும்.    அது அவர் கைகளால்  எழுதியது போலவே தெரியவில்லை. அது அச்சு அசல் கம்ப்யூட்டர் பிரிண்ட் எழுத்துக்கள் போல மிகவும் அழகாக உள்ளது. 

சலீமாவின் தாத்தா  மற்றும்  பாட்டி குரானை எழுதுவதோடு நில்லாமல்  எழுத்துக்கலையில் ஆர்வம் காட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர். தனக்கு புனித குர்ஆனை எழுதும் திறனை அளித்த அல்லாஹ்வுக்கு தான் மிகவும் நன்றியுள்ளவளாக  இருப்பதாக  சலீமா கூறுகிறார்.

எனது சகோதர சகோதரிகள் மற்றும் எனது தாத்தா பாட்டி என அனைவரும்  நான் புனித குர்ஆனை படிக்கவும் எழுதவும் வேண்டும் என்று விரும்பி னார்கள். திடீரென்று எனக்கும் குர்ஆனை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. குர்ஆன் எழுதும் போது  ஏதும்  தவறிழைக்கக் கூடாது   என்று மிகவும்   பயமாக இருந்தது. எனவே  நான் அவ்வப்போது எங்களுடைய இரண்டு மௌலானாக்களிடம் என் எழுத்துக்களைச் சரிபார்த்த போது அவர்கள் தவறில்லை” என்று கூறினார்கள்.

ஒட்டுமொத்த குஜ்ஜார் சமூகமும்  அவரது சாதனைகளுக்காக பெருமிதம் கொள்கிறது. கிராமம் முழுவதும் சலீமா குஜ்ஜார் சமூகத்திற்கு பெருமை சேர்த்ததாக கூறுகிறது. இப்போது சலீமா புனித குர்ஆனை தனது தாய் மொழியான ‘கோஜ்ரி’க்கு மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளார்., இது  அவரது  குஜ்ஜார் சமூகம் குர்ஆனைப் புரிந்துகொள்வதை எளிதாக்கும்.

எனது பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகள் நான் புனித நூலை எழுதும் போது எனக்கு மிகவும் ஆதரவளித்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு அதீத ஆதரவைக் காட்டினார்கள்.   எனது தந்தை நான் எழுத வேண்டிய அனைத்தையும் எனக்கு  கொண்டு வந்தார். எனது குடும்பத்தினர்  எனக்கு அனைத்தையும் வழங்கினர். முதலில், நான். கோஜ்ரியில் மொழியில்  குர்ஆனை  மொழி பெயர்க்க விரும்பினேன், ஆனால் , பின்னர்  குர்ஆனை முதலில் அரபியில் எழுத முடிவு செய்தேன்.  இப்போது கோஜ்ரி மொழிபெயர்ப்பையும் செய்வேன்.

 குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த  நான் எங்கள் சமூகம் புனித குர்ஆனைப் புரிந்துகொள்வதை எளிதாக்க விரும்புகிறேன். . இது  மக்களை மேலும் மேலும்  சென்றடையும் வகையில் அச்சிடப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சலீமா கூறினார். அப்பகுதி குஜ்ஜார் சமூகத்தினர் சலீமாவின் கையால் எழுதப்பட்ட குர்ஆனை அச்சிட்டு வெளியிட அரசு உதவும் என்று நம்புகின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top