கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ!
கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ! மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெரியளவில் பேசப்பட காரணமாக இருந்ததே கைதி திரைப்படம் தான். அப்படத்தின் மிக பெரிய வெற்றி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் கைதி திரைப்படத்தின் போதே அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படி தளபதி 67 திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே கைதி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் யுனிவர்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக ராகவா லாரன்ஸ் இருப்பார் எனவும் தகவல் பரவி வருகிறது.
Latest Slideshows






