-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
திடீரென ஏற்படும் பங்கு சந்தை சரிவுகள்
பங்கு சந்தை சரிவு – ஒரு நாட்டின் பங்குச் சந்தையை சார்ந்தே அந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் அமைந்துள்ளது. பங்கு விலைகளில் திடீரென ஏற்படும் வியத்தகு வீழ்ச்சியை, சரிவை பங்குச் சந்தை வீழ்ச்சி/சரிவு என்கிறோம். இந்த திடீரென ஏற்படும் வியத்தகு வீழ்ச்சி/சரிவு பங்குச் சந்தை பங்குகளின் மதிப்பில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தும். பங்குகளின் விலைகளில் கடுமையான, எதிர்பாராத வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
பெரும்பாலும் சந்தை முழுவதும் பரவும் ஊகங்கள், ஊக கூறுகள், பொருளாதார வீழ்ச்சி நிலைமைகள், பேரழிவு நிகழ்வுகள், போர்கள், பெரிய கார்ப்பரேட் ஹேக்குகள், பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரழிவுகள், ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள், கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் ஆகியவை பங்குகளின் பங்குச் சந்தை மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இது ஒரு சமூக நிகழ்வு ஆகும்.
பங்கு சந்தை விலையில் திடீர் வீழ்ச்சியைத் தொடர்ந்து பங்குகளை விற்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும். சமூக பொருளாதாரத்தில் மற்றும் முதலீட்டாளர்களின் வாழ்க்கையில் பங்குச் சந்தையின் வீழ்ச்சிகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, ஒரு நாட்டின் பங்குச் சந்தைப் போக்கில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் முன் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள்.
பொதுவாக எதிர்பாராத பங்குச் சந்தை சரிவுகள் சாதாரணமானவை அல்ல. எதிர்பாராத விபத்துக்கள் நடைபெறும் முன், நமது உலகம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கிட்டத்தட்ட நிலையானதாகவும், ஏமாற்றும் விதமாகவும், சீரானதாகவும் நமக்கு தெரிகிறது. இறுதியாக விபத்துக்கள் நடைபெறும் போது, நமது உலகம் நம்மை தாக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஆச்சரியமாக நம் அனைவருக்கும் அது தெரிகிறது. விபத்துகளில் திடீர் வியத்தகு விலை சரிவு மற்றும் பீதி விற்பனை ஆகியவை ஏற்படும். பங்கு விலைகள் சரிந்த போதிலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகப் போட்டியிடும் நிறுவனங்களுக்கான பங்கு விலைகள் உயரக்கூடும்.
விபத்துக்கள் கரடி சந்தைகளுடன் சம்பத்தப்பட்ட போதிலும், பெரும்பாலும் கரடி சந்தைகளில் இருந்து வேறுபடுகின்றன (கரடி சந்தைகளில் பங்குச் சந்தை விலைகளின் காலங்களின் கணக்கு ஆனது மாதங்கள் அல்லது ஆண்டுகளில் அளவிடப்படும்) ஜனவரி 24, 2023 அன்று Sensex (30-பங்கு குறியீடு) வெறும் 2 நாட்களில் 1,800 புள்ளிகளுக்கு மேல் குறைந்து (60,978.75 – 59,108) வர்த்தகம் செய்யப்பட்டது. (12.40 p.m மணியளவில்) அதேபோல், 50-பங்கு 17081 புள்ளிகளில் இருந்து 81,81 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகள் சரிவுக்கான முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
அதிக வட்டி விகிதங்கள், வளர்ந்த நாடுகளில் முதலீடு மற்றும் ஏற்றுமதியின் மந்தநிலை அபாயங்கள் ஆகியவற்றை பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக கணித்துள்ளது. 2022ல் 3 %மாக இருந்த உலகப் பொருளாதார வளர்ச்சி 2023ல் 1.9%க குறையும் என்று கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
27.01.2023 வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது தொடர்ச்சியான அமர்வுக்கு (After the Second Sitting) பின், Reliance Industries, Adani Enterprises மற்றும் Adani Sports உள்ளிட்ட குறியீட்டு heavy weightகளில் அதிக விற்பனைக்கு மத்தியில் Bench mark equity குறியீடுகளான BSI, SENSEX மற்றும் NSE, NIFT தங்கள் இழப்புகளை நீட்டித்தன. January 24, 2023 அன்று ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 20 அடிப்படை புள்ளிகளால் 5.8% -ஆக குறைத்தது.
அதிக வட்டி விகிதங்கள், வளர்ந்த நாடுகளில் முதலீடு மற்றும் பொருளாதார ஏற்றுமதியின் மந்தநிலை அபாயங்கள் ஆகியவதார வீழ்ச்சிக்கு காரணமாக ஐக்கிய சபை நாடுகள் கணித்துள்ளது. 2022 ல் 3 %மாக 2022ல் இருந்த உலகப் பொருளாதார வளர்ச்சி 2023ல் 1.9%க குறையும் என்று கணித்துள்ளது.
FII-யின் வெளியேற்றம்
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2022ல் ரூ1.20 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்குகளை இறக்கியுள்ளனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், ஒரு மாத அடிப்படையில் ஜனவரி 25 வரை ரூ.16,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இந்த நிகழ்வானது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் ஜனவரி மாத விற்பனை சந்தை உணர்வை எடைபோட்டது.
ஜனவரி 27 RIL, Adhani, Bank பங்குகளின் விற்பனை இந்திய பங்குச் சந்தையில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தியது. NIFT குறியீட்டில் 10%-ற்கு மேல் weightage வைத்திருந்த RIL இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மதியம் 2.50% ஆக குறைந்து ரூ.2,321க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. Adhani எண்டர்பிரைசஸ் பங்குகள் 9.18 % மற்றும் சில NIFT பங்குகளும் சரிந்தன.
ஜனவரி 24 அன்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் பின்னர், கடந்த சில சதாப்தங்களாக இந்திய குழுமம் பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி Adhani குழுமத்தின் பங்குகள் அழுத்தத்திற்கு உள்ளானது. வங்கி மேஜர்களான SBI, ICCI மற்றும் AXIS வங்கி ஆகியவையும் 3 % மேல் சரிந்தன.
முதலீட்டாளர்கள் நிலையான வைப்பு, ஆபத்து இல்லாத மற்றும் பிற பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை நோக்கி உயரும் வட்டி விகிதங்களுடன் மாறலாம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. தங்கத்தின் விலை ரூ.54,656-ல் இருந்து ரூ.56903 ஆக உயர்ந்துள்ளது.
யூனியன் பட்ஜெட்
பிப்ரவரி 1, 2023 அன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது வரும் 2024 ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மோடி 2.0 அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் வாகும். சந்தை பார்வையாளர்கள், வர்த்தகர்களும் 2023 – 2024 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டுக்கு முன்னதாக ஓரங்கட்டப்பட்டதாகவே நம்புகின்றனர்.






