-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
பெண் வேடத்தில் ஆண்கள்: ஆண்டவனின் முன்னே ஆன்மா ஒன்றே
இன்று 29.03.2023 கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளங்கராவில் உள்ள தேவி கோயிலில் கொண்டாடப்படும் சமயவிளக்கு திருவிழா அதிகம் அறியப்படாத மிகவும் தனித்துவமான திருவிழா ஆகும். இன்று 29.03.2023 தொடங்கி இரண்டு நாள் திருவிழா நடைபெறும்.
பல தனித்துவமான பண்டிகைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றன. காந்தாரப் படத்தில் காட்டப்பட்டும் பூதக் கோல விழா, ஜல்லிக்கட்டு, ஆட்டுக்கல் பொங்கல் போல சமயவிளக்கு திருவிழாவும் அதிகம் அறியப்படாத ஒரு திருவிழா ஆகும். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். பல்வேறு வயது பிரிவு ஆண்கள் பெண்கள் வேடமணிந்து கலந்து கொள்கிறார்கள்.
கொல்லத்தில் உள்ள கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழாவில் பங்கேற்க பெண் வேடத்தில் ஆண்கள் வருகின்றனர். பகவதி தேவியின் முன் ஆண்கள் தங்கள் பாவங்களுக்கு பெண் வேடத்தில் ஆண்கள் பாரம்பரிய கோயில் தீபம் ஏற்றுவார்கள். அதாவது பரிகாரம் செய்யும் அடையாள திருவிழா ஆகும். இத்திருவிழாவை கொண்டாடும் ஆண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதோடு, அவர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது நம்பிக்கை. சாமயா என்பதிலிருந்து சமயவிளக்கு என்ற பெயர் வந்தது, அதாவது சாமயா என்பது “ஒப்பனை” என்று பொருள். இத்திருவிழாவைக் கொண்டாட கொட்டாங்குளங்கரா தேவி கோயிலுக்கு வர வேண்டும்.
சுயம்பு
கோயிலில் உள்ள தெய்வம் சுயமாக உருவானதால் சுயம்பு என்று அறியப்படுகிறது. கருவறையில் கூரை இல்லாத கோயில் என்று தனிச்சிறப்பு வாய்ந்தது. கோயிலின் முதன்மை தெய்வம் வனதுர்கா என்று அழைக்கப்படும் துர்கா தேவி கோயிலின் முதன்மை தெய்வம் .
விழாக்களில் பெண் வேடத்தில் ஆண்கள் பாரம்பரிய கோயில் தீபம் ஏற்றுவார்கள். இந்த திருவிழா ஆண்டுதோறும் மீனம் மாதத்தின் 10 வது மற்றும் 11 வது நாட்களில் கொண்டாடப்படுகின்றது. நாட்டுப்புறக் கதைகளின்படி கோயிலின் புராணக்கதை காட்டில் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களுக்கு தேங்காய் கிடைத்ததைத் தொடர்ந்து திருவிழா உருவானது.
திருவிழா கொண்டாட்டங்கள்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். தனிச்சிறப்பு வாய்ந்த திருவிழா இதுபெண்கள் வேஷம் போடுகிறார்கள். கோவிலில் ஆண்கள் இந்த திருவிழாவில் பெண் வேடமணிந்து பகவதி தேவியை வழிபடுவதால் இது மிகவும் தனித்துவமான திருவிழாவாகும். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழாவைக் காண, பங்கேற்க கொட்டாங்குளங்கரா தேவி கோயிலுக்கு வர வேண்டும்.
விழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்கள் தங்கள் மதத்தை பொருட்படுத்தாமல் பெண்களைப் போல உடை அணிந்து பகவதி தேவிக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். அதிகாலையில் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. பங்கேற்பாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள் தேவியின் தேர்களை தயார் செய்து, அழகான மலர்களால் அலங்கரிக்கிறார்கள். அதன் பின்னர், ஆண்கள் பெண்களைப் போல அரை புடவை, புடவை அல்லது சுடிதார் உடையணிந்து கனமான மேக்கப் மற்றும் நகைகளை அணிவார்கள் உண்மையான விழாக்களுக்குத் தயாராகிறார்கள்.
மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விரிவான கூந்தல்களுடன் காணப்படும் ஆண்களை பெண்களிடம் இருந்து பிரித்து சொல்வது கடினம். முற்றிலும் அடையாளம் காண முடியாத வகையில் காட்சியளிக்கின்றனர். சமீபத்தில்,அதிகாரியான ஆனந்த் ரூபனகுடி, சமயவிளக்கு திருவிழாவின் ஒரு பெண்ணைப் போல அலங்கரிக்கப்பட்டார். இவரது புகைப்படம் சமூக வலைதள பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அதிகாரி ட்வீட்ல், பெண்ணாக மாறுவதில் ஆணின் பரிபூரணம், மேக்கப் போட்டியில் முதல் பரிசை வெல்ல வைத்தது என்று குறிப்பிடுகிறார்.
ஆண்கள் ஊர்வலத்தின் போதும், பிரார்த்தனை செய்யும் போதும், சமயவிளக்கை ( ஐந்து திரிகளால் ஏற்றப்படும் விளக்கு) எடுத்துச் செல்கிறார்கள். வேலை, செல்வம் போன்றவற்றில் ஆசீர்வாதங்களை இத் திருவிழா கொண்டுவருவதாக ஆண்கள் நம்புகிறார்கள்.
கோவில் அதிகாரிகளின் கூற்றுப்படி, கோவிட்க்கு முந்தைய காலங்களில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 3000-4000 வரை இருந்தது. பாலின, மத தடைகளைத் தாண்டி, பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் ஆன்மிக திருவிழா என்பதற்கு சமயவிளக்கு திருவிழா ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.








