Gistak Media – Cinema News | Trending News | Latest News

தமிழ் எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா

தமிழ் எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா ஒரு வரலாறு கட்டுரைத் தொகுப்பு நூல் ஆகும். மறைக்கப்பட்ட இந்தியா என்ற  இந்நூலில் பல வரலாற்றுச் செய்திகளும் நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட இந்தியா நூலாசிரியர் S.ராமகிருஷ்ணன் அவர்கள் கால ஓட்டத்தில் மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட போராட்டங்கள், வரலாற்றுத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வி நிலையங்கள் என பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஜூனியர் விகடன் என்னும் வாரஇதழில்  இந்த மறைக்கப்பட்ட இந்தியா நூல் ஒரு தொடராக வெளிவந்தள்ளது.

மேலும் இந்நூலாசிரியர் தாகூரின் கல்வி முறை, மொகலாய ஓவியங்கள், இந்தியாவின் மூன்று அடையாளங்கள், கொடுங்கோல் ஜமீன்தார்கள், டாக்கா மஸ்லின் துணி, இண்டிகோ புரட்சி, ஜந்தர் மந்தர், பிரம்ம சமாஜம், இந்தியாவில் ஆர்மீனியர்கள், நேதாஜியின் டோக்யோ கேடட்ஸ், பஞ்சாபிகள் படுகொலை என பல வரலாற்றுத் தகவல்களை சிறப்பாக வழங்கியுள்ளார்.

மறைக்கப்பட்ட இந்தியா - Platform Tamil

தமிழ் எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் வழங்கிய  சிறப்பான தகவல்களை கீழே முத்துக்களாக  தொகுக்கப்பட்டுள்ளன. 

  • முண்டக உபநிடத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றுதான்  ‘சத்திய மேவ ஜெயதே’ என்னும் சொற்தொடர். இதுவே நமது தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • மோகன்லால் கரம்சந் காந்தி அவர்களுக்கு மகாத்மா பட்டம் வழங்கபடுவதுக்கு முன்பாகவே 1888 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேக்கு மகாத்மா பட்டத்தை புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.
  • 1863 இல் சென்னையில் நிலவியல் ஆய்வாளர்  ராபர்ட்டு புரூசு புட் பல்லாவரம் அருகில் கல்லால் ஆன கைக்கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார். ராபர்ட்டு புரூசு புட் தமது ஆய்வு மூலம் அந்த கல்லால் ஆன கைக்கோடரி சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்தியது என்று கண்டுபிடித்தார்.
  • படித்த உயர்வகுப்பை சேர்ந்த பல பிரிட்டிஷ் இளைஞர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு  வேலை நிமித்தமாக வந்து விட்ட காரணத்தால் தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்று தேடிய இளம் வெள்ளைக்கார பெண்கள் கப்பல் கப்பலாக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
  • விடுதலைப் போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தமது எமிலி என்னும் சுருக்கெழுத்து உதவியாளரான பெண்ணை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.
  • நாயர் ஜான் என்னும் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் குடியேறி இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உதவியுள்ளார். நேதாஜியின் இந்தியத் தேசியப் படைக்கு நாயர் ஜான்  ஆதரவாக இருந்து செயல்பட்டுள்ளார். ஜப்பானில் ஓர் உணவகத்தை நாயர் ஜான் நடத்தி வந்துள்ளார்.
  • குஜராத்தைச் சேர்ந்த உஷா மேத்தா என்னும் விடுதலைப் போராட்ட பெண்மணியால் காங்கிரசு வானொலி அல்லது இரகசிய வானொலி என்று அழைக்கப்பெற்ற ஒலிபரப்பு நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் அரசு விவசாயிகளை பருத்தித் துணிகளுக்கு நீல வண்ணம் ஏற்றுவதற்குப் பயன்படும் அவுரிச் செடியை  விளைவிக்க கட்டாயப் படுத்தியது. இதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை துப்பாக்கியைக் காட்டியும் இராணுவத்தை வரவழைத்தும்  பிரிட்டிஷ் அரசு ஒடுக்கியது.
  • இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை கிராண்ட் டிரங்க் சாலை ஆகும். இந்த கிராண்ட் டிரங்க் சாலை மௌரியப் பேரரசால் மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டது.
  • தென்தமிழ் நாட்டின் பெருஞ்சாலை மங்கம்மாள் சாலை இதைப் போல பெருமை வாய்ந்தது ஆகும்.
  • பிரபல தொழில் முதலாளி ஆர்.டி. டாட்டா என்பவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஒரு பிரெஞ்சு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் டாட்டா பார்சி இனத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்டார். 

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தனைத் தேடிய பயணி என்னும் தலைப்பில் 17 ஆண்டுகள் யுவான் சுவாங் பயணம் செய்து திரட்டிய விவரங்களை தெளிவாக மற்றும் விரிவாக எழுதியுள்ளார். இந்த மறைக்கப்பட்ட இந்தியா நூல் 2013 இல் விகடன் பிரசுரத்தால் வெளிவந்தது. ஜூனியர் விகடன் என்னும் வாரஇதழில்  இந்த மறைக்கப்பட்ட இந்தியா நூல் ஒரு தொடராக வெளிவந்தள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top