Gistak Media – Cinema News | Trending News | Latest News

Yoga Benefits In Tamil: யோகா பயன்கள் மற்றும் வகைகள்

யோகா என்றால் என்ன?

யோகா என்றால் என்ன? அதை ஏன் செய்ய வேண்டும்? எதற்கு செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்பொழுது செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் நிறைய தோன்றுவதற்கு முக்கிய காரணம், யோகாவைப் பற்றின தெளிவான புரிதல் இல்லாததே,  இதனைப்பற்றி ஒவ்வொரு அறிஞர்களும் ஒவ்வொரு விளக்கத்தை தருகின்றனர். இதனாலேயே பல குழப்பங்கள் ஏற்பட்டு பல கேள்விகள் எழுகின்றன. இந்த குழப்பங்களும், கேள்விகளும் எழாமலிருக்க சரியான அணுகுமுறையுடன் யோகாவை கற்று அதை செயல்படுத்தி ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளவேண்டும். 

இந்திய கலைகளில் யோகக்கலை பழம்பெரும்கலையாக போற்றப்பட்டு வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இக்கலைக்கு எழுத்து வடிவம் கொடுத்து யோகசூத்திரம் அமைத்து. உயிரூட்டி நிலைபெறச் செய்தவர். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் ஆவார்.

இவர் யோகத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். இதனால் யோகக் கலையும் பதஞ்சலி யோகம் என்றே அழைக்கப்படுகிறது. யோகா என்ற வடமொழி சொல்லுக்கு இணைத்தல் அல்லது ஒன்றாதல் அல்லது ஒருமுகப்படுத்துதல் என்று பொருள். உடலோடு உயிர் இணைந்து நிற்க வேண்டும். உயிரோடு மனம் ஒன்றுபட வேண்டும்.

உடலும், மனமும் இறைநிலையோடு இணைவதே யோகம். என்பதே அறிஞர்களின் விளக்கமாகும். இறைநிலை தெளிவில் இருந்துக் கொண்டு இறைநியதிகளை உணர்ந்து அவற்றிற்கு முரண்படாது அவற்றை மதித்து அவற்றிற்கு இசைவாக வாழ்தலே யோகம் ஆகும். யோகாவில் வெற்றி பெறுவதற்கு ஆசனப்பயிற்சிகள் மிகவும் உதவுகின்றன.

பதஞ்சலி முனிவர் யோகக்கலையை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளார். அவைகள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகரா, தாரனா, தியானம், சமாதி எனப்படும். இதில் மூன்றாவது அங்கமே உடலை சரிசெய்யக்கூடிய யோகாசனம் ஆகும். இது தியானம் செய்ய உடலை தயார் படுத்துவதுடன், நோய் வராமல் உடலை  காக்கிறது. எல்லா வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஆசனங்களாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசனங்கள் உடலை இருக்கமின்றி வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் இந்த ஆசனங்களை செய்துவிட்டு, தியானம் செய்யும்போது மனம் எளிதில் ஒருமைப் படுத்தப்பட்டு, ஒருமுகச் சிந்தனை தோன்றி தியானத்தில் கவனம் செலுத்த முடிகிறது. 

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு 8 வயது முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆசனங்களை செய்யலாம். மனதை ஒருநிலைப் படுத்தி செய்தல் மிகவும் அவசியம்.

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்(Yoga Benefits):

யோகா ஒரு சிறந்த வலிநிவாரணி, தலைவலி, முதுகுவலி, கை-கால் வலி, மூட்டுவலி போன்ற உடல் வலி ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு முறைகள் உள்ளது. சிறு வயதிலிருந்தே நாம் இதனை செய்வதனால் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த வயதிலும் உடலை வளைக்கும் தன்மையை இப்பயிற்சி மூலம் நாம் பெறலாம். மன அமைதி, தன்னம்பிக்கை, வாழ்வில் வெற்றி இவையனைத்திற்கும் ஆசனங்கள் மிக உதவியாக இருக்கும்.

நோய் வராமல் தடுக்கவும், வந்த நோய்களை குணமாக்கவும் இது பெரிதும் உதவுகின்றது. சில மருந்து, மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிறந்த வலி நிவாரணியான இது எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் வலியை குணப்படுத்துகிறது. மூச்சுக்காற்று மண்டலம், இரத்த மண்டலம், ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் இவை சீராக இயங்க உதவுகிறது.

யோகாசனம் செய்வதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் அதிக ஆற்றலை கொடுத்து, உருதியையும் புத்துணர்ச்சியையும் அளித்துக்கொண்டே இருக்கும். மேலும் உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் நல்லிணக்கம் உண்டாகும். ஒழுக்க பண்புகளை மனதளவில் வளர்த்துக்கொள்ள உதவுகிறது. நமது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை சீரமைத்தும், நரம்புகளை ஊக்கப்படுத்தியும் இளமையை நீடிக்க உதவுகிறது. உடலுக்கு அழகான வடிவத்தையும் கொடுக்கிறது. ஆன்மா தன் பரிபூரண நிலையை அறிந்துகொள்ளவும் உதவுகிறது. தொடர்ந்து யோகாசனங்கள் செய்து வந்தால் நம் உடலில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

நோய் வந்தபிறகு மருத்துவமனைக்கு சென்று நம் பணத்தை விரயம் செய்வதை தவிர்த்து, தினமும் யோகாசனத்திற்கென்று நேரம் ஒதுக்கி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் 15 முதல் 30 நிமிடங்கள் செலவழித்தாலேபோதுமானது, அதனால் நாம் அடையப்போகும் பலன்கள் ஏராளம். எந்தவித நோயுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம். 

யோகா வகைகளும், அவற்றை செய்யும் முறைகளும்:

ஐக்கிய நாடுகளின் பொதுசபை ஜூன் 21 ம் தேதி தேசிய சர்வதேச யோகா தினமாக 2014 ம் ஆண்டு அறிவித்தது.  உலகம் முழுவதும் இந்த தினத்தை 2015 முதல் கடைபிடித்து வருகிறது. ஒவ்வொரு யோகாசனத்திற்கும் ஒவ்வொரு செயல் முறைகள் இருக்கிறது. அந்தந்த வழிமுறையோடு செய்தால் முழுப்பலனையும் பெறலாம். 

சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சிரசாசனம், சாந்தியாசனம், நித்ராசனம், சர்வாங்காசனம், கூர்மாசனம், பவனமுக்தாசனம், மயூராசனம், காலாசனம், திரிகோணாசனம், பத்மசிராசனம், சிம்ஹாசனம், பகாசனம், சலபாசனம் என பலவகைகளில் யோகாசனங்கள் உண்டு. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற, முறைகள் இருக்கிறது. அந்த பயிற்சிகளை சரியான முறையில் கற்று தினமும் செய்துவர ஆரோக்கியமாக வாழலாம்.

யோகாசனங்களை விடியற் காலையில், வெறும் வயிற்றோடுதான் செய்ய வேண்டும். மேலும் திறந்தவெளியில், சுத்தமான காற்றை சுவாசிக்கக்கூடிய வகையிலும், அமைதியான இடத்திலேயே செய்ய வேண்டும். ஆசனங்கள் வெறும் தரையில் செய்யக்கூடாது ஏனெனில் நம் உடலில் உள்ள சத்திகள் புவி ஈர்ப்பு விசையுடன் பிணைக்கப்படும் அவ்வாறு பிணைக்கப்பட்டால் பயிற்சியினால் கிடைக்கும் சக்திகள் உடலில் முழுமையாக சேராது இந்த காரணத்தால் தான் தரையில் ஏதேனும் விரிப்பை பயன்படுத்தி ஆசனங்களையும் தியானங்களையும் செய்ய வேண்டும். இதன்படி யோகப்பயிற்சிகள் செய்துவந்தால் உடல் மட்டுமல்ல, உளவியல் ரீதியாவும் பல நன்மைகளை அடையலாம்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top