Gistak Media

1400 Staff Write Letter To Sundar Pichai - சுந்தர் பிச்சைக்கு 1400 ஊழியர்கள் கடிதம்

1400 Staff Write Letter To Sundar Pichai – கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 1400 ஊழியர்கள், பணிநீக்க நடடிக்கைகளில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று ஆல்பாபெட்டின் தலைமை அதிகாரியானக்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

ஆல்பாபெட் ஊழியர்களால் கையெழுத்திடப்பட்ட அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுவதாவது : “கூகுள் நிறுவனத்தில் 12,000 பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஊழியர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.” நிறுவனம் புதிய பணியாளர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பும் போது, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதேசமயம் கட்டாய பணிநீக்கங்களுக்கு முன்னதாக தாமாக முன்வந்து பணிவிலக வருவோர்க்கு முன்னுரிமை தந்து சலுகைகளை வழங்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கடுமையான மோதல்கள் அல்லது உக்ரைன் போன்ற மனிதாபிமான நெருக்கடி உள்ள நாடுகளில் உள்ள பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் விசா இணைக்கப்பட்ட தங்குமிடத்துடன் கூடிய வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆல்பாபெட் தனது பணியாளர்களை நீக்கும் முடிவின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும். தொழிலாளர்களின் குரலுக்கு போதிய மதிப்பு வழங்கப்படவில்லை. தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது வலிமையானது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு மந்தநிலையைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் செலவைக் குறைக்க முடிவு செய்தனர். முதலீட்டாளர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஆல்பாபெட் தனது பணியாளர்களில் 6 சதவீத பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் ஆல்பாபெட் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் பணிநீக்க நடவடிக்கையில் உரிய மரியாதை வழங்கக் கோரி அந்நிறுவன 1400 ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நிறுவனமான அசெஞ்சர் நேற்று 19,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 2.5 சதவீதமாகும். செலவைக் குறைக்கவும், செயல்பாடுகளை சீராக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசெஞ்சர் தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனம் வருவாய் மற்றும் லாபத்திற்கான மதிப்பீடுகளை குறைத்துள்ளது. நடப்பு காலாண்டின் வருவாய் 16.7 பில்லியன் டாலராக (ரூ. 1.36 லட்சம் கோடி) இருக்கும் என்று அசெஞ்சர் தெரிவித்துள்ளது.

மெட்டா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

Latest Slideshows

3 thoughts on “1400 Staff Write Letter To Sundar Pichai – சுந்தர் பிச்சைக்கு 1400 ஊழியர்கள் கடிதம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top