16 Health Benefits Of Coriander | தனியாவின் 16 பயன்கள்
சமையல் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று தான் தனியா(Coriander). இதற்கு மல்லி விதைகள் என்று இன்னொரு பெயரும் உண்டு.
இந்த விதைகள் கொத்தமல்லி என்னும் தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இந்த கொத்தமல்லி இலைகளும், விதைகளும் சமையலுக்கு நன்கு மனம் மற்றும் சுவை தரக் கூடியவை. இதனால் பெரும்பான்மையான சமையல்களில் இந்த பொருளை பயன்படுத்துவார்கள். இவை சுவை மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. இந்த தனியா (Coriander) விதைகளில் நிறைய மருத்துவப் பயன்கள் அடங்கியுள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
அதிக ஆன்டி ஆக்சிடண்ட் நிறைத்த உணவுகளில் இதுவும் ஒன்று. நமது சமயலறையில் உள்ள நோய் தீர்க்கும் சக்திவாந்த உணவுப் பொருள் தனியா (Coriander) விதைகள். அதிக ஆன்டி ஆக்சிடண்ட் நிறைத்த உணவுகளில் இதுவும் ஒன்று. கொத்தமல்லி இலைகளும் அதன் விதைகளும் அதிக மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டவை. தனியா (Coriander) விதைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், விட்டமின் ஏ, விட்டமின் பி1, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், மெக்னிஷியம், பாஸ்பரஸ், சோடியம், மாங்கனீசு, நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக ஹைபிரைட் தனியா விதைகளை பயன்படுத்துவதை விட சிறிய அளவில் இருக்கும் நாட்டுமல்லி விதைகளை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் ஆரம்ப நிலையில் பச்சை நிறத்தில் இருக்கும் தனியா மிகவும் நல்லது நீண்ட நாட்கள் வைத்தும் பயன்படுத்தலாம். இந்த தனியா (Coriander) விதைகளை தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கியமான நன்மைகள்….
தனியாவின் (Coriander) 16 பயன்கள்
- தனியாவில் இயற்கையாகவே நிறைந்துள்ள வேதியப்பொருட்கள் உடலில் தேங்கும் எல்டிஎல்(LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. எனவே 1அல்லது 2 தேக்கரண்டி தனியாவை (Coriander) தேனீர் செய்து தினமும் குடித்துவந்தால் உடல் பருமனை குறைக்கச் செய்யும். இதய நோய் வருவதை தடுக்கும்.
- கொத்தமல்லி தேனீரை அருந்துவதன் மூலம் கணைய செல்கள் தூண்டப்பட்டு இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது இதனால் இரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை வெளியேறி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடற்ச்சோர்வு,சிறுநீர் தொற்றுக்களைத் தடுக்கிறது.
- கல்லீரலில் உள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்றும் சிறந்த ஒரு இயற்கை பொருள் தனியா (Coriander). தொடர்ந்து கொத்தமல்லி தேனீரை அருந்திவர கல்லீரல் நோய்கள் குறையும் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் படிப்படியாக நீங்கி கல்லீரலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- தைராய்டு ஹார்மோன் பிரட்சனையால் ஏற்படும் தைராய்டு பாதிப்புகளுக்கு தனியா (Coriander) சிறந்தது. காலை வெறும் வயிற்றில் தனியாவுடன் மிளகு சேர்த்து, கசாயமாக செய்து அருந்தி வந்தால் தைராய்டு சுரப்பிகளில் உள்ள பாதிப்புகள் நீங்கி தைராய்டு பிரச்சனைகளும் குறைய தொடங்கும். ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையை சீராக்க உதவும்.
- வயிற்றுப்புண், குடல்புண் போன்ற பிரட்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்தமல்லி விதைகளின், தேநீரில் பனங்கற்கண்டை சேர்த்து அருந்திவர நாள்பட்ட வயிற்றுப் புண்கள் படிப்படியாக குறையும்.
- தனியாவுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து நீரிலிட்டு கொதிக்கவைத்து தினமும் அருந்தி வரும்பொழுது அஜீரணம், பசி இன்மை, வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற பிரட்சனைகள் குணமாகும். செரிமான மண்டலத்தை பலப்படுத்தும்.
- பித்தத்தைப் போக்கும். உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை குறைத்து. பித்தத்தினால் ஏற்படும் குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் தனியாவுக்கு உண்டு. இந்த விதையின் கசாயத்தை தினமும் எடுத்துக்கொண்டால். அதிகமாக உள்ள பித்தம் குறைந்து சீராகும்.
- சளி, இருமல், ஒற்றைத்தலைவலி, சுவாசப்பாதை தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு தனியா (Coriander), சுக்கு, மிளகு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து அருந்திவரும்போது சளி தொடர்பான பிரச்சனைகள் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நுரையீரல் மண்டலம் பலம் பெரும்.
- உடலில் உள்ள இரத்த குழாய்களை பாதுகாக்க தனியா (Coriander) சிறந்தது இது இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உயர் இரத்த அழுத்த பிரட்சனையை குறைத்து கட்டுப்படுத்துகிறது. இரத்த கொதிப்பு இருப்பவர்கள் தினமும் கொத்தமல்லி விதை தேனீரை எடுத்துக்கொள்வது மிக நல்லது.
- உடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகளை வெளியேற்றும் தன்மைக்கொண்டது தனியா (Coriander). சொறி சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, தேமல் போன்ற பிரட்சனை இருப்பவர்கள் தினமும் தனியாவை நீரிலிட்டு கொதிக்க வைத்து அருந்துவதன் மூலம் இது போன்ற தொழுநோய்கள் குறையத் தொடங்கும்.
- நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது ஆற்றல் இந்த விதைக்கு உள்ளது. குறிப்பாக மூளைப் பகுதியில் உள்ள செல்கள், நரம்புகளின் செயல் திறனை தூண்டி நியாபக மறதி, அல்ஸிமர் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
- விட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருப்தால் கண் பார்வைக்கு நல்லது. தொடர்ந்து கொத்தமல்லி விதை தேனீரை அருந்துவதால் கண் நரம்புகள் ஊட்டம் பெரும், கண் பார்வைத்திறன் அதிகரிக்கும், கண் தொடர்பான நோய்கள் குறையும்.
- கை, கால் எரிச்சலை சரிசெய்கிறது. கொத்தமல்லி இலைகளும், விதைகளும் உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் பாதங்களில் ஏற்படுகின்ற எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது. தினமும் கொத்தமல்லி இலை சாறு அல்லது கொத்தமல்லி விதை தேனீரை அருந்தி வருவது சிறந்தது. அதுமட்டுமின்றி கொத்தமல்லி இலைகளை அரைத்து எரிச்சல் இருக்கும் பகுதிகளில் பற்றாகப் போடும்போது இப்பிரட்சனைகள் குறையும்.
- இதிலுள்ள விட்டமின் ‘சி’ உடலில் இரும்புச்சத்தை உறுஞ்சச்செய்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்தம் உற்பத்தி ஆக உதவுகிறது. இரத்த சோகையை குறைகிறது.
- மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும் ஆற்றல் தனியாவுக்கு (Coriander) உண்டு. மாதவிடாய் பிரட்சனை உள்ள பெண்கள் தனியா விதையுடன் சம அளவு சீரகம் இட்டு நீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால். மாதவிடாய் சீராக வரத்தொடங்கும் கருப்பை பலம் பெரும்.
- தனியாவில் (Coriander) ஆன்டிஆக்சிடண்ட் அதிக அளவில் உள்ளது இது உடலில் தேங்கியுள்ள புற்றுநோய் செல்களை வெளியேற்ற கூடியது.பலவகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கிறது.








