Gistak Media

4 Banks Hike In FD Rates : நான்கு வங்கிகள் பிப்ரவரி முதல் FD வட்டி விகிதங்களை உயர்த்த அறிவித்துள்ளன

4 Banks Hike In FD Rates - 4 Banks 2024 பிப்ரவரியில் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை உயர்த்த உள்ளன :

Axis Bank, Punjab National Bank (PNB), HDFC Bank மற்றும் IndusInd Bank ஆகிய நான்கு முக்கிய வங்கிகள் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு சிறந்த விருப்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தங்களுடைய நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை உயர்த்த (4 Banks Hike In FD Rates) அறிவித்துள்ளன. இந்த 2024 பிப்ரவரியில் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களில் திருத்தங்கள் ஆனது (4 Banks Hike In FD Rates) மேற்கொள்ளப்படும்.

முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உயர்த்தப்பட்ட FD வட்டி விகிதங்களில் இருந்து நல்ல  பயனடையலாம். Reserve Bank Of India (RBI) Governor Shaktikanta Das தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (MPC – Monetary Policy Committee) ஆனது Repo Rate விகிதத்தை 6.5%-ல் மாற்றாமல் வைத்திருக்கும் போதிலும், இந்த 4 வங்கிகளில் இந்த FD விகிதம் திருத்தம் ஏற்படுகிறது. கடந்த பல காலாண்டுகளில் டெபாசிட் வளர்ச்சியை விட கடன் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதால் டெபாசிட் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.

FD திட்டங்களில் முதலீடு நல்ல பலன் தரும் :

நிலையான சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடும் போது FD திட்டங்களில் முதலீடுகள் அசல் மீது அதிக வருமானத்தை அளிக்கின்றன. BankBazaar.com இன் CEO Adhil Shetty, முதலீட்டாளர்கள் 1-ஆண்டு, 2-ஆண்டு, 3-ஆண்டு மற்றும் 5-ஆண்டுகள் போன்ற பல்வேறு காலகட்டங்களில் FD-களில் முதலீடு செய்யலாம் என்றும் அவை  முதலீட்டாளர்களின் முதலீட்டின் ஒரு பகுதி ஆண்டுதோறும் முதிர்ச்சி அடைவதை உறுதி செய்கிறது என்றும் பரிந்துரைக்கிறார்.

சேமிப்பின் சராசரி வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இது நிரூபிக்கிறது. FD முதிர்ச்சியடைந்தவுடன், அதைப் புதுப்பிக்கவோ அல்லது நிதியைத் திரும்பப் பெறவோ முதலீட்டாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மை உள்ளது. குறைந்த பணவீக்கத்தில் சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் முதிர்ச்சியடைந்த FD தொகையை நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்களில் மீண்டும் முதலீடு செய்யலாம். மாறாக, வட்டி விகிதங்கள் உயர்ந்தால், அதிக விகிதங்களில் இருந்து முதலீட்டாளர்கள் ஆதாயமடைவார்கள். இந்த நேரத்தில், 4 முன்னணி வங்கிகள் 3 வருட FD-களுக்கு 7%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அவற்றில் முதலீடு வைப்புச் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பரிந்துரைக்கிறார்.

  • Punjab National Bank (PNB)

பஞ்சாப் நேஷனல்  ஆனது திருத்தத்திற்குப் பிறகு,

  • பொது மக்களுக்கு ஆண்டுக்கு 3.50% முதல் 7.25% வரை
  • மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4.00% முதல் 7.75% வரை

FD விகிதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திருத்தப்பட்ட FD விகித கட்டணங்கள் ஆனது பிப்ரவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இதன் கால அவகாசம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.

  • HDFC Bank

HDFC வங்கி அதன் மொத்த நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை ₹2 கோடிக்கு மேல் ₹5 கோடிக்கு திருத்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட FD விகித கட்டணங்கள் ஆனது பிப்ரவரி 3, 2024 முதல் நடைமுறைக்கு வரும். HDFC வங்கி ஆனது திருத்தத்திற்குப் பிறகு,

  • வழக்கமான குடிமக்களுக்கான கட்டணங்கள் 4.75% முதல் 7.40% வரை
  • மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.50% வட்டி

வழங்க முடிவு செய்துள்ளது. ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான விதிமுறைகளுக்கு அதிகபட்ச விகிதங்கள் ஆனது 7.90% வரை கிடைக்கும்.

  • IndusInd Bank

IndusInd வங்கி ஆனது திருத்தத்திற்குப் பிறகு,

  • பொது வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்கள் ஆண்டுக்கு 3.50% முதல் 7.75% வரை
  • மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4.00% முதல் 8.25% வரை வழங்க முடிவு செய்துள்ளது.

    இந்த திருத்தப்பட்ட FD விகித கட்டணங்கள் ஆனது பிப்ரவரி 6, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
  • Axis Bank

Axis Bank ஆனது திருத்தத்திற்குப் பிறகு,

  • பொது வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்கள் ஆண்டுக்கு 1% வரை
  • மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 75% வரை வழங்க முடிவு செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top