4 Month Old Baby Creates World Record : உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத பெண் குழந்தை
4 மாத கைவல்யா - இளம் வயதிலேயே உலக சாதனை படைத்தவர் :
பிப்ரவரி 3, 2024 அன்று கைவல்யா “100+ ஃபிளாஷ் கார்டுகளை அடையாளம் கண்ட உலகின் முதல் நான்கு மாத குழந்தை” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நடிகமா பகுதியைச் சேர்ந்த பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தை கைவல்யா உலக சாதனை படைத்து (4 Month Old Baby Creates World Record) நோபல் புக் ஆஃப் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. குழந்தை கைவல்யாவின் விதிவிலக்கான நினைவாற்றல் மற்றும் அங்கீகாரத் திறன்களுக்காக இந்த நோபல் உலக சாதனை சான்றிதழ் ஆனது வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3, 2024 அன்று வழங்கப்பட்டுள்ளது.
4 Month Old Baby Creates World Record :
குழந்தை கைவல்யாவால் 120 வெவ்வேறு விஷயங்களை பார்த்து அடையாளம் காண்பிக்க முடியும். அதாவது,
- மலர்கள் – 12
- பழங்கள் – 27
- காய்கறிகள் – 27
- விலங்குகள் – 27
- பறவைகள் – 27
ஆகியவற்றை அடையாளம் காண்பிக்க முடியும். குழந்தை கைவல்யா அபார அசாதாரண நினைவாற்றல் திறமையால் பறவைகளை அடையாளம் கண்டு கூறுவது காண்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த கைவல்யா குழந்தைக்கு மட்டும் எப்படி இத்தனை புத்திக்கூர்மை இருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. கைவல்யா 2 மாதக் குழந்தையாக இருந்தபோது தொலைக்காட்சியில் வரும் மிருகங்களை அடையாளம் காட்டியதை பார்த்த அதன் தாயார் ஹேமா ஆச்சரியம் அடைந்தார். தனது குழந்தை கைவல்யாவுக்கு இவ்விதமான சிறப்பு திறமை இருப்பதை அறிந்த தாய் ஹேமா தொடர்ந்து பயிற்சிக் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து தாயார் ஹேமா அதனை வீடியோவாக பதிவு செய்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்தார். Noble World Records குழுவினர் குழந்தை கைவல்யாவின் அந்த வீடியோவை பார்த்தனர். Noble World Records என்னும் உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த குழுவினர் குழந்தையை சென்று பார்த்து, அவளது திறமையைக் கண்டு வியந்து, அவளுக்கு “World’s First Four Months Baby To Identify 100+ Flashcards” என்னும் பட்டத்தைக் கொடுத்துள்ளார்கள். குழந்தை கைவல்யாவின் அபாரத் திறமையால் தற்போது அது உலக சாதனை புத்தகத்திலும் (4 Month Old Baby Creates World Record) இடம்பெற்றிருக்கிறது.
புத்திக்கூர்மை கூறித்து 2 தரப்பு மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து :
- ஒரு தரப்பு மருத்துவ விஞ்ஞானிகள் புத்திக்கூர்மை என்பது கருவில் இருக்கும் போது கிடைக்கும் வரம் என்று வாதிட்டு வருகின்றனர்.
- மற்றொரு தரப்பு மருத்துவ விஞ்ஞானிகள் புத்திக்கூர்மை என்பது கடின உழைப்பு மற்றும் வளர்ப்பு முறைகள் காரணமாக வளர்வது என்று வாதிட்டு வருகின்றனர்.
- புத்திக்கூர்மை கூறித்து 2 தரப்பு மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து எவ்வாறாகினும் சில குழந்தைகளின் புத்திக்கூர்மையும், அவற்றின் திறமையும் உலகை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சில சம்பவங்கள் :
- 3 வயது அமெரிக்க குழந்தை 5 மொழிகளில் சரளமாக பேசுவது
- 2 வயது குழந்தை 1330 திருக்குறள்களையும் சொல்வது
- பெங்களூரை சேர்ந்த இரண்டரை வயது குழந்தையான ரித்தின் என்பவர் 100-க்கும் மேற்பட்ட நிறங்கள், தேசியக் கொடிகள், கிரகங்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் கூறுவது
- ஆந்திரப் பிரதேசத்தின் நந்திகமத்தைச் சேர்ந்த நான்கு மாத குழந்தையின் கதை கற்பனை செய்ய முடியாததைச் செய்து குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.
- ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதித் விஸ்வநாத் கவுரிஷெட்டி என்ற ஒரு வயது மற்றும் 9 மாத குழந்தை தனது பெயரை ‘உலக சாதனை புத்தகம்’ மற்றும் நான்கு சாதனை புத்தகங்களில் பதிவு செய்த பின்னர் வயது வெறும் எண் என்பதை நிரூபித்தார். ஆதித் தனது பெயரை ‘வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் மேலும் இரண்டு தேசிய சாதனைகளில் தனது நினைவாற்றல் திறனுக்காக வைத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இப்போது வைரலான அந்த வீடியோவில், கைவல்யா மற்றும் அவரது குடும்பத்தினரும் அங்கீகாரம் பெற்ற பதக்கத்தை கழுத்தில் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்து (4 Month Old Baby Creates World Record) மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!