4 New Municipal Corporations in Tamilnadu : தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் கடந்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக 15/03/2024 அன்று அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை ஆனது 25 ஆக உயர்ந்து உள்ளது. புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் ஆனது வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெற உதவும்.
மேலும் நல்ல வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பளிக்கும். மேலும் இந்த புதிய மாநகராட்சிகள் உருவாக்கத்தின் மூலம் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றின் அருகினில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும். இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்லும் மக்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறுவர்.
4 New Municipal Corporations in Tamilnadu : தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை
இந்தியாவிலே தமிழ்நாடு ஆனது அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மாநிலத்தில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவதீம் 48,45% ஆக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்தது. தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவதீம் 53%- திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவான நகரமயமாக்கல் ஆனது நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், மற்றும் குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை அரசுக்கு உருவாக்கியுள்ளது.
தமிழக அரசு ஆனது மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என கருதுகிறது. இதனடிப்படையில், தமிழக அரசு ஆனது தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார். அதன்படி 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கப்பட்டுள்ளன.
- புதுக்கோட்டை மாநகராட்சி – புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து.
- திருவண்ணாமலை மாநகராட்சி – திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து.
- நாமக்கல் மாநகராட்சி – நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து.
- காரைக்குடி மாநகராட்சி – காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள் ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து
இதன்படி 1998 ஆம் ஆண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!