4th Test IND vs AUS Live Score: Day 1
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் ஹெட் களமிறங்கினர். ஹெட் 32 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த லபுஷேன் 3 ரன்களில் ஷமியிடம் விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து இணைந்த கவாஜா மற்றும் அந்த அணியின் கேப்டன் ஸ்மித் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 79 ரன்களை எடுத்தனர். 135 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித், ஜடேஜாவின் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
கவாஜா,கேமரூன் கிரீனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 85 ரன்கள் எடுத்தனர். கவாஜா 246 பந்துகளில் சதம் அடித்தார். முதல் நாளின் கடைசி ஓவரில் அவர் இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 104 ரன்களுடனும், கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கவாஜாவின் சதம், இதுவரை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளது.
4th Test IND vs AUS Live Score: Day 2
தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிறப்பாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தார். என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விழித்து நின்றனர். இந்திய அணி சார்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்து வீசினாலும், கவாஜாவை வீழ்த்த முடியவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா முதல் நாளிலேயே சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதம் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அடித்த முதல் சதமாகும்.
அதன்பின் நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. ஆஸ்திரேலியா 378 ரன்கள் எடுத்திருந்த போது சதத்தை கடந்து விளையாடிக்கொண்டிருந்த கேமரூன் கெய்ரின் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 170 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். அதன்பின், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் இருவரும் அஷ்வின் சூழல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்தியா ஆட்டத்தை கட்டுப்படுத்தியது.
ஆனால் கவாஜா நிலைத்து நின்று இரட்டை சதத்தை நோக்கி விளையாடினார். ஆனால் அவரை 180 ரன்களில் அக்சர் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால் பின்னர் மர்பியும் நாதன் லைனும் கைகோர்த்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணியை 500 ரன்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களது பார்ட்னர்ஷிப்பை முறியடித்த அஸ்வின், இருவரையும் அடுத்தடுத்து பந்துவீச்சில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை 480 ரன்களுக்கு முடித்தார்.
இந்தியா சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. கவாஜா 180 ரன்களும், கேமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர். அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4th Test IND vs AUS Live Score: Day 3
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தது. பின்னர் கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கில்லுடன் இணைந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மான் கில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன்பிறகு வந்த விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடினார். நாதன் லயன் பந்துவீச்சில்,12 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 128 ரன்கள் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார். ஆனால் தொடர் முழுவதும் மோசமாக விளையாடி வந்த விராட் கோலி, இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 59 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4th Test IND vs AUS Live Score: Day 4
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 571 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவை விட 88 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. கோலியும் ஜடேஜாவும் விளையாடினர். இதில் ஜடேஜா 84 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கே.எஸ்.பரத் பேட்டிங் செய்ய வந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் உடனடியாக எங்கே? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். முதுகுவலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பிசிசிஐ மருத்துவக் குழு அவரை பரிசோதித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லைன், மர்பி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோன்று ஆஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய கவாஜா 180 ஓட்டங்களையும், கேமரூன் கிரீன் 114 ஓட்டங்களையும் பெற்றனர். அதேபோல், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் சுப்மான் கில் 128 ரன்களும், விராட் கோலி 186 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு பிறகு 571 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
அதன்பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்துள்ளது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இந்திய அணி 88 ரன்கள் ஆஸ்திரேலிய விட முன்னிலையில் உள்ளது.