-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
80 வயதில் நடிக்கும் பாரதிராஜா….
80களில் கிராமத்து மண்வாசம் மாறாத படைப்புகளை கொடுத்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, சமீபகாலமாக நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இருப்பினும் 80 வயதான பாரதிராஜா, தன் மகன் மனோஜை தூக்கி விட வேண்டும் என்று அதிரடி முடிவு எடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுகங்களுடன் நடிக்கிறார்.
வயதின் காரணமாக ஒரு சில படங்களை நிராகரித்து வந்த பாரதிராஜா, தற்போது 80 வயதிலும் தன்னுடைய மகனை தூக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் 31ம் தேதி மணிரத்தினம் உள்ளிட்ட 10 முன்னணி இயக்குனர்கள் அறிவிக்க உள்ளனர். மேலும் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். முதல்முறையாக இயக்குனராக அவதாரம் எடுப்பது மட்டுமின்றி தனது தந்தையை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மனோஜ் ‘பம்பாய்’ படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனோஜ் மட்டுமல்ல பாரதிராஜாவும் மீண்டும் படத்தை இயக்க இருக்கிறார். இறுதியாக ‘மீண்டும் ஒரு மரியாதையை ‘ என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து தற்போது பாரதிராஜா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை இயக்கி வருகிறார். தேனி பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘தாய் மெய்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தை முடித்துவிட்டு மனோஜ் இயக்கும் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்








