9 Karat Gold : இந்தியாவில் 9 Karat தங்கம் அறிமுகமாகிறது
9 Karat Gold :
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த 2024 ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை ஆனது 1.5% அதிகரித்துள்ளது. இந்தியாவில் வரும் 2025 ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை ஆனது 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஆனது 2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியாவில் மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 Karat தங்கத்திற்கு (9 Karat Gold) ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர்.
இந்த 9 Karat Gold முடிவு ஆனது தங்க நகை வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முக்கிய அமைப்புகளுடன் நடந்த இறுதிச் சுற்று ஆலோசனையை தொடர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு ஆனது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி 9 Karat தங்கப் பொருட்களை வாங்குபவர்களுக்கு உடனடி தூய்மைச் சான்றிதழ் ஆனது வழங்கப்படும். தற்போது 14 Karat தங்கம் ஆனது தங்க சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் மலிவு விலை தங்கம் நுகர்வோர் மத்தியில் 9 Karat Gold ஆனது நல்ல ஆதரவை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 9 Karat தங்கத்திற்கு விரைவில் ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி வழங்கப்பட உள்ளது. Karat என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும். பொதுவாக இந்த Karat என்பது எப்போதும் 9 மற்றும் 24க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். இந்த Karat எண் அதிகமாக இருந்தால், அந்த தங்கம் ஆனது தூய்மையான தங்கம் ஆகும்.
- 24 Karat தங்கம் – தூய தங்கம் ஆகும். வேறு எந்த உலோகமும் இல்லை.
- 22 Karat தங்கம் – 67% தூய தங்கம் ஆகும். செம்பு, துத்தநாகம், வெள்ளி மற்றும் நிக்கல் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
- 18 Karat தங்கம் – 75% தங்கம் ஆகும். 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள் ஆகும்.
- 14 Karat தங்கம் – 58.33% தூய தங்கம் ஆகும். 41.67% மற்ற உலோகங்கள்.
- 9 Karat Gold என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் அமைவிடமாக இந்தியா இருப்பதால் 9 Karat Gold தூய்மை குறைவான தங்கமாக இருந்தாலும் எல்லோராலும் வாங்கும் வகையில் மிக குறைவான விலையில் இருக்கும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!