Aadujeevitham First Day Box Office Collection : ஆடுஜீவிதம் படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்
ஆடுஜீவிதம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில், பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம் மார்ச் 28 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்க இயக்குனர் பிளெஸ்ஸி 14 ஆண்டுகள் காத்திருந்தார்.
மேலும் நடிகர் பிருத்விராஜ் தனது உடல் எடையை குறைத்து படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பிருத்விராஜின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அவரது உணர்ச்சி மற்றும் உடல் மொழி நடிப்பிற்காக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். ஆடுஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் (Aadujeevitham First Day Box Office Collection) குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆடுஜீவிதம் மையக்கருத்து :
நஜீப் முகமது (பிரித்விராஜ்) மற்றும் அவரது நண்பர் ஹக்கீம் ஆகியோர் எப்படியாவது வெளிநாட்டில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிறு ஆசையுடன் செழிப்பான சொந்த ஊரையும் அவரது கர்ப்பிணி மனைவி சைனியையும் விட்டு சவுதி அரேபியாவுக்கு செல்கிறார்கள். சவுதி சென்றதும் அவளை அழைத்துச் செல்ல ஏஜெண்ட் யாரும் வராமல் தவிக்கிறார்கள். அப்போது ஏஜெண்ட் போல் செயல்படும் ஒருவரிடம் சிக்கி ஆடு, ஒட்டகம் மேய்க்கும் அடிமையாக பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, தான் பேசுவதைப் புரிய வைக்க முடியாமல், எதிரில் இருப்பவரின் மொழி புரியாமல் அடிமையாக இருப்பதை நஜீப் உணர்கிறார். நஜீப் முகமது இந்த பாலைவனத்தில் இருந்து மீண்டு வந்த கதையை ஆடுஜீவிதம் மிகவும் உணர்ச்சிகரமாக சொல்கிறது.
ஆடுஜீவிதம் முதல்நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்(Aadujeevitham First Day Box Office Collection)
இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நாளில் படம் வெளியானாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. ஆடுஜீவிதம் திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ 7.45 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் மூன்று காட்சிகளைக் காட்டிலும் இரவுக் காட்சிக்கு ரசிகர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அந்தத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் விடுமுறை நாட்களில் இந்த வசூல் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?