Gistak Media

AAI Jobs விமானத்துறையில் 496 காலியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • AAI Jobs : இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Airports Authority Of India) இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AAI Jobs - காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) :

  • காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய விமானநிலைய ஆணையத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு  496 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம் அல்லது இயற்பியல் துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
  • வயதுத் தகுதி (Age) : 30.11.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
  • சம்பளம் (Salary) : இந்திய விமானநிலைய ஆணையத்தில்  இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.40000-140000 (வருடத்திற்கு ரூ.13 லட்சம்) வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI Jobs - தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) :

  • தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்தப் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் மட்டுமே  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்திய விமானநிலைய ஆணையத்தில் (AAI Jobs) இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் https://www.aai.aero/en/recruitment/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்திய விமானநிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு 30.11.2023 அன்று மாலை வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விவரங்களுக்கு :

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2005-2023.pdf
என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top