Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு பத்திரப்பதிவில் புரட்சிகரமான திட்டத்தை அறிமுகம் (Access Land Details In Without Documents) செய்துள்ளது. நில மோசடிகளில் பொது மக்கள் ஏமாறுவதை தடுக்கவும், பத்திரப்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நில ஆவணங்கள் தொடர்பாக துல்லியமான விவரங்களை அறியவும் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இனி எந்த ஆவணங்கள் இல்லாமலும் நிலத்தின் விவரங்களை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் அறிந்து கொள்ள புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய இணையதளம் அறிமுகம் (Access Land Details In Without Documents)
எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலத்தின் விவரங்களை அறிந்து கொள்ள தமிழக அரசு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற புதிய இணையத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம், சர்வே எண் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிலத்தின் உரிமையாளரை அறியலாம்
இந்த இணையதளத்தில் தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தாலும் நிலத்தின் உரிமையாளர் யார், நிலத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு, யார் பெயரில் பட்டா இருக்கிறது, பத்திரம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, நிலத்தின் தற்போதைய அரசு மதிப்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சம்மந்தப்பட்ட நிலம் எந்த மாவட்டம், அதன் தாலுகா, அருகிலுள்ள மருத்துவமனை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை போன்ற தகவல்களையும் முழுமையாக அறியலாம். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல்முறையாக பல வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சிதமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
பட்டா பெயர் மாற்ற இணையதளம்
மக்கள் தங்கள் நிலத்தின் பட்டா மாற்றுவதற்கு நேரடியாக https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் பட்டா மாறுதலில் உட்பிரிவு இனங்கள், உட்பிரிவு இல்லாத இனங்கள் இரண்டுக்குமே விண்ணப்பித்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய இணையதளத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நிலங்களின் அ-பதிவேடு விவரம், அரசு புறம்போக்கு நில (Access Land Details In Without Documents) விவரங்களை அறிய முடியும். மேலும் ஒரு நிலத்தின் புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வில்லேஜ் மாஸ்டர் இணையதளம்
தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் நில விவரங்களை எளிமையாக அறிந்து கொள்ள தமிழக அரசு ‘வில்லேஜ் மாஸ்டர்’ என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் நிலத்தின் சர்வே எண் தெரியவில்லை என்றாலும், சர்வே எண்ணை கண்டறிந்து, அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!