Gistak Media

Actor Shaam Talk About Vijay : 2 முன்னணி நடிகைகளை குதிரை என வர்ணித்த விஜய்

Actor Shaam Talk About Vijay :

ஜோதிகா, சிம்ரன் பற்றி விஜய் பேசியதாக ஷாம் கூறியிருப்பது (Actor Shaam Talk About Vijay) தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியோ நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் படுக்கையறை காட்சியோ, பலாத்கார காட்சியோ இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போதெல்லாம் நடிகைகளுடன் வில்லன்களை நடிக்க வைக்க விரும்பவில்லை. குஷ்பு, ரோஜா மாதிரி த்ரிஷாவையும் கட்டிலில் தூக்கிப்போடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 150 படங்களில் செய்யாத கொடுமையா? என்று ஆபாசமாக பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

த்ரிஷா கண்டனம் :

மன்சூர் அலிகானின் மோசமான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள த்ரிஷா, “மன்சூர் அலிகான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோவைப் பார்த்தேன். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம். ஆனால் இதுவரை இது போன்றதொரு நபருடன் நடிக்கவில்லை என்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. இனி வரும் நாட்களில் எனது திரையுலக வாழ்க்கையில் நான் அவருடன் நடிக்க மாட்டேன். அவர் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு” என்று தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகானின் விளக்கம் :

மன்சூர் அலிகான் தனது மோசமான பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார், நான் த்ரிஷாவை பற்றி தவறாக பேசவில்லை, அந்த பேட்டியில் நிஜமாகவே அந்த பெண்ணை உயர்வாகத்தான் சொல்லியிருப்பேன், அதை கட் பண்ணி போட்டு கலவரம் செய்ய நெனச்சா, நான் இந்த கலவரங்களுக்கு பயப்பட மாட்டேன். மன்சூர் அலிகான் கூறுகையில், உலகில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பொழப்ப பாருங்கப்பா என அலட்சியமாக மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

நடிகைகளை குதிரை என பேசிய விஜய் :

மன்சூர் அலிகான் விவகாரம் இப்படி எரிய ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் விஜய் தன்னிடம் ஏதோ சொன்னதாக நடிகர் ஷாம் கூறிய வீடியோ (Actor Shaam Talk About Vijay) அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு பேட்டியில், “நான் 12B-யில் நான் நடிகராக அறிமுகமானேன். அதை விஜய்யிடம் சொன்னேன். அப்போது அவர், “டேய் யாரு டா நீ முதல் படத்திலேயே ஜோதிகா சிம்ரன் என இரண்டு குதிரைகளோடு வர” என்று கேட்டதாக தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் ஏன் நடிகைகளை குதிரை என்று சொல்ல வேண்டும். அதையும் ஆபாசமாக சொன்னார். மன்சூர் சொன்னது கண்டிப்பாக தவறு. அதேபோல் விஜய் ஷாமிடம் அப்படி பேசியது தவறு என்று (Actor Shaam Talk About Vijay) வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். த்ரிஷா விவகாரம் குறித்து விஜய் இன்னும் வாய் திறக்காத சூழலில் இந்த விவகாரம் புதிதாக தொடங்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top