Gistak Media

Adiyaathi Song : ஆட்டம் போட வைக்கும் 'அடியாத்தி' பாடல்...

Adiyaathi Song :

இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பரம்பொருள் படத்தில் பாடியுள்ள (Adiyaathi Song) பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் பெரும்பாலான படங்களில் அனிருத்தின் குரல் இடம் பெற்றுவிடுகிறது. இந்த நிலையில் பரம்பொருள் படத்தில் இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனிருத் அவருடன் இணைந்து ‘அடியாத்தி’ என்ற பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் படத்தின் ப்ரோமோ பாடலாக வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ பாடலை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டார்.

அனிருத் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இருவரும் இணைந்து ஒரு ப்ரோமோவை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடலும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு Adiyaathi Song வெளியானது. இந்தப் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், சரத்குமார், அமிதாஷ் மற்றும் நடனக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இது ஒரு கலர்ஃபுல்லான பாடலாக அமைந்துள்ளது.

பாடலாசிரியர் சினேகன் எழுதிய இந்தப் பாடல், வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல, மன அமைதிதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக “மூன்று வேலை பசித்தால் நோயில்லாத தேகம்… படுத்தவுடன் உறங்கினால் வாழ்க்கையே யோகம்… ஆடும் வரை இந்த மேடை உனக்குடா… அம்மனமான வாழ்வில் வேடம் எதுக்குடா… என்ற வரிகள் கவனத்தை ஈர்க்கிறது. இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top