Agal Vilakku Book Review : மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு புத்தக விமர்சனம்
ஆசிரியர் குறிப்பு
அகல் விளக்கு என்பது மு.வரதராசனார் எழுதிய ஒரு வரலாற்று புதினமாகும். இந்நூல் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதையை தழுவி மு.வரதராசனார் எழுதியுள்ளார். இந்த நூல் இன்றைய சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளையும் (Agal Vilakku Book Review) தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த புதினத்திற்காக மு.வரதராசனாருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
புத்தக சுருக்கம்
சந்திரனும் வேலனும் இளமைகாலத்து நண்பர்கள். இருவரும் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாம் வகுப்புக்குப் பிறகு, அவர்களின் வாழ்வில் முதல்முறையாக பிரிவு ஏற்பட்டது. இந்த பிரிவானது ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்கு கொண்டு சேர்த்துவிட்டது. ஆனால் சந்திரனின் வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது. அதேபோல் வேலனுடைய வாழ்க்கை பறந்த சமவெளியில் அமைதியாகச் ஓடும் பெரிய ஆற்றை போல் கடந்து செல்கிறது.
இருவரும் எதார்த்தமாக ஒரு நாள் சந்திக்கும் போது சந்திரன், வேலனிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், ஆனால் அவள் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாகவும் வேலனிடம் கூறுகிறான். அதேசமயம் வேலனுக்கு ஒரு நல்வாழ்க்கை கிடைத்துள்ளதை தெரிவிக்கிறான். ஆனால் சந்திரன் பிரிந்து சென்ற தன் காதலியை நினைத்து வருத்தப்பட்டு இருப்பதை பார்த்து, அவன் சந்திரனைத் திருத்த முயல்கிறான், ஆனால் சந்திரன் கடைசியில் இறந்து விடுகிறான். இக்கதையின் மூலம் சந்திரனைப் போல் கூரிய அறிவும், அழகும் பெற்று அதனால் செருக்கடைந்து வாழ்க்கையில் சீரழிந்து (Agal Vilakku Book Review) தாமும் கெட்டுப், பிறர்க்கு சுமையாக வாழ்வதைவிட, வேலனை போல் அறிவு குறைவாக இருந்தாலும், இளைஞர்கள் நல்ல சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ வேண்டும் என மு.வரதராசனார் உணர்த்தியுள்ளார்.
சமுதாய சிந்தனைகள் (Agal Vilakku Book Review)
இந்த அகல் விளக்கு நாவலின் மூலம் ஆசிரியர் மு.வரதராசனார் இன்றைய சமுதாயத்தில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், காதல் என்றால் என்ன, நண்பர்களின் கடமை என்ன போன்ற பல கருத்துக்களை முன்வைக்கிறார். மேலும் இந்நூல் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், நட்பு, இளைஞர்களின் வாழ்க்கை போன்ற பல கருத்துக்களை முன்வைக்கிறது. மேலும் இந்த நூல் குறிப்பாக இளைஞர்களுக்கும், சமூக அக்கறை கொண்டவர்களுக்கும், சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!