Agni Natchathiram 2024 : நாளை முதல் ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்
Agni Natchathiram 2024 :
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram 2024) தொடங்கவுள்ளது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக வெப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை உச்சத்தை அடைகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. அக்னி நட்சத்திரம் நாளை துவங்கி 25 நாட்கள் அதாவது மே 28ம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் ஏற்கனவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் வெப்பம் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எப்போதும் குளிராக இருக்கும் ஊட்டி, கொடைக்கானலில் இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. நாளை அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram 2024) துவங்க உள்ள நிலையில், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!