Agriculture Employment 2023 : வேளாண் துறையில் வேலைவாய்ப்பு
Agriculture Employment 2023 : தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விரிவாக்க துணைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agriculture Officer) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க துணைப் பணியிடங்களில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் என மொத்தம் 263 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியில் சேர்வதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Agriculture Employment 2023 - பணியிட விவரங்கள் :
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணியிடம்: உதவி வேளாண்மை அலுவலர் – 84
தகுதி: இந்தப் பதவிக்கு (Agriculture Employment 2023) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10-12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டு வேளாண் படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு (Agriculture Employment 2023) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600 முதல் ரூ.76,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: இந்தப் பதவிக்கான (Agriculture Employment 2023) தேர்வு செயல்முறை ஒற்றை நிலையினை கொண்டது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு விதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆதார் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24/12/2023. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!