எய்ம்ஸ் (AIIMS – All India Institute of Medical Sciences) என்பது இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி அரசு மருத்துவ நிறுவனமானகும். எய்ம்ஸ் மருத்துவமனையில் எய்ம்ஸ் NORCET 10 தேர்வு மூலம் சுமார் 3,000 நர்சிங் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற அறிவிப்பு ஆனது (AIIMS Job) பிப்ரவரி 13, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது அரசு மருத்துவத் துறையில் உள்ள ஒரு நிலையான உயர்ந்த ஊதியத்துடன் கூடிய பெரிய வேலைவாய்ப்பு ஆகும்.
நர்சிங் பணியிட விவரங்கள்
- பணியின் பெயர் – நர்சிங் அதிகாரி (Nursing Officer)
- காலியிடங்கள்- 3,000
பணியிடங்கள் எங்கெங்கு உள்ளன என்ற பட்டியல்
- AIIMS Madurai
- AIIMS New Delhi
- AIIMS Mangalagiri (Andhra Pradesh)
- AIIMS Rishikesh
- AIIMS Rae Bareli
- AIIMS Raipur
- AIIMS Nagpur
- AIIMS Bhopal
- AIIMS Bhubaneswar
- AIIMS Jodhpur
- AIIMS Patna
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 7வது ஊதிய கமிஷன் (Pay Level 7) அடிப்படையில் மாதச்சம்பளம் வழங்கப்படும்.
- அடிப்படை சம்பளம் – Rs. 44,900 – Rs. 1,42,400. (Level 7).
- டியர் கழிவு (DA, தற்போது 50%) – 22,450 முதல்.
- வீட்டு வாடகை (HRA) – 3,591 – Rs. 18,744 வரை (நகரம் சார்ந்து வேறுபடும்).
- போக்குவரத்து உதவி (TA) – 1,600 – Rs. 4,800.
கல்வித் தகுதி (AIIMS Job)
- B.Sc. Nursing படித்தவர்கள்
- Post Basic B.Sc. Nursing முடித்தவர்கள்
- GNM டிப்ளோமா + 2 ஆண்டு அனுபவம் அவசியம்
- ஸ்டேட்/இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய நர்சிங் கவுன்சிலில் (INC) பதிவு என்பது மிகவும் அவசியமாகும்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விவரங்கள்
- பொதுப் பிரிவினர் (General/UR) -18-30 வயது
- EWS பிரிவினர் – 18-30 வயது
- OBC பிரிவினர் – 18-33 வயது
- SC/ST பிரிவினர் – 18-35 வயது
இரண்டு கட்ட தேர்வு முறை
நாடு முழுவதும் தேர்வு கணினி வழி தேர்வு (CBT) இரண்டு (AIIMS Job) கட்டங்களில் நடைபெறும்.
முதல் கட்ட தேர்வு – 100 மதிப்பெண்கள்
- GK – 20
- Nursing – 80
இரண்டாம் கட்ட தேர்வு – 160 மதிப்பெண்கள்
- Nursing சார்ந்த 4 செக்ஷன்கள். ஒவ்வொரு செக்ஷன்களிலும் 40 கேள்விகள். இந்த இரண்டு கட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
- SC/ST/ EWS பிரிவினர்- ரூ. 2,400/-
- மற்றைய பிரிவினர்- ரூ. 3,000
- மாற்றுத்திறனாளி பிரிவினர் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பிப்ரவரி 24 முதல் மார்ச் 16 வரை aiimsexams.ac.in-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரியான முறையில் அப்லோடு செய்ய வேண்டும். தேர்வு தேதி ஆனது அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.