சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அமரன் திரைப்படம் இந்த வாரம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் (Amaran Box Office) செய்யும் என கூறப்படுகிறது. தற்போது நடைபெற்ற அமரன் படத்தின் வெற்றி விழா மேடையிலேயே படம் 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக சிவகார்த்திகேயனே தெரிவித்திருந்தார். தமிழகத்தைப் போலவே ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வார நாட்களில் கூட புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் முன்பதிவு தளங்களில் படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமரன் படம் 200 கோடி மட்டுமின்றி 300 கோடியையும் எட்டும் என்று கணிப்புகள் கிளம்பியுள்ளன.
Amaran Box Office வசூல்
கடந்த 2022 ஆண்டு தீபாவளி அன்று பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்ததால் படம் ஓடவில்லை. ஆனால் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியான அமரன் (Amaran Box Office) மிஸ்ஸே ஆகாது கன்ஃபார்மாக வெற்றி பெறும் என படத்தின் ப்ரோமோஷனில் சிவகார்த்திகேயன் கூறியது போல் படம் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த எந்தப் படமும் இதுவரை 150 கோடியைத் தாண்டியதில்லை என்றாலும் தீபாவளி வார இறுதியில் ராயன் படத்தின் வாழ்நாள் வசூலை சிவகார்த்திகேயன் எட்டியுள்ளார்.
அமரன் திரைப்படம் அதிகபட்சம் 200 கோடி வசூலை அள்ளும் என்றும் அஜித்தின் கடைசிப் படமான துணிவு படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியாவின் கங்குவா படம் வெளியாகும் வரை அமரன் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் இந்த வாரமும் அடுத்த வாரமும் இதேபோல் படம் ஓடினால் 250 கோடி முதல் 300 கோடி வரை வசூலை (Amaran Box Office) அமரன் அள்ளும் என்று கூறப்படுகிறது.