'Amazon Great Republic Day Sale 2024' எனும் சிறப்பு விற்பனை விரைவில் தொடங்க உள்ளது
Amazon Great Republic Day Sale 2024 :
Amazon ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024’ எனும் சிறப்பு விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. இந்நிறுவனம் இதுகுறித்து டீசர் ஒன்றை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் விற்பனையானது ஜனவரி 15-ம் தேதி தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி 15-ம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் வெளியிட்டுள்ள இந்த டீசரில் ஐபோன் 13, ஒன்பிளஸ் 11 5ஜி, ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்23 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஹானர் 90 5ஜி, ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி, மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ராஇ ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி உள்ளிட்ட போன்களுக்கு தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் அமேசான் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் சலுகைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோ காஸ்ட் EMI விருப்பங்களிலும் மொபைல்போன்களை வாங்க முடியும் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த Amazon Great Republic Day Sale 2024 எனும் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த அமேசான் ‘Amazon Great Republic Day Sale 2024’ சிறப்பு விற்பனையில் லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு 60% சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹெச்பி, டெல், ஆஷஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த Amazon Great Republic Day Sale 2024 சிறப்பு விற்பனை மூலம் ஹெட்ஃபோன்களை 80% சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை இந்த சிறப்பு விற்பனையில் 50% சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும். மேலும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு 80% சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Ra-Next Real Estate : ரியல் எஸ்டேட் டிஜிட்டல் கட்டமைப்பு தர முகமையாக ராநெக்ஸ்ட்.. அங்கீகாரம் வழங்கியது டிராய்
-
Weight Loss Tips in Tamil : இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கும் 10 எளிய வழிகள்?
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!