Animal Movie Teaser : அனிமல் படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசர் (Animal Movie Teaser) வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Animal Movie Teaser :
Animal Movie Teaser : படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகியுள்ளது. நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்பீர் கபூருடன் பேசுவது போன்ற காட்சியுடன் டீசர் (Animal Movie Teaser) தொடங்குகிறது.
ரன்பீரின் தந்தையை பற்றி தவறாக கூறிய ராஷ்மிகாவை ரன்பீர் மிரட்டுகிறார். ஒரு பணக்கார குடும்பத்தில் கண்டிப்பான தந்தையான அனில் கபூரின் பிடிக்காத மகனாக ரன்பீர் கபூர் காட்டப்படுகிறார். டீசரில் அவன் அப்பாவால் அடிக்கப்படுவதும், திட்டுவதும் போல தெரிகிறது. ஆனால் அடுத்த நொடியே ரன்பீர் கபூர் ஸ்டைலான கேங்ஸ்டர் தோற்றத்தில் தோன்றுகிறார். அதன் பிறகு ஆக்சன் அவதாரம் எடுக்கிறார். டீசரின் முடிவில் வாயில் சிகரெட் பிடிப்பதும், எதிரி கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சி கைதி, கேஜிஎஃப், விக்ரம், மார்க் ஆண்டனி போன்ற படங்களை நினைவுபடுத்துகிறது. இந்த படம் தந்தை மகன் பாசப்பிணைப்பை ஒரு தனித்துவமான கோணத்தில் காட்டும் ஆக்சன் படமாக இருக்கும் என டீசரில் (Animal Movie Teaser) தெரிகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!