Gistak Media – Cinema News | Trending News | Latest News

Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்

சென்னையில் Apollo Hospitals 1983-ல் தொடங்கப்பட்டது. Apollo Hospitals குழுமத்தின் நிறுவனராக மற்றும் தலைவராக டாக்டர். பிரதாப் ரெட்டி (Apollo Hospitals Success Story) செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் 71 மருத்துவமனைகள், 3,400 மருந்தகங்கள் மற்றும் 90 முதன்மை பராமரிப்பு கிளினிக்குகளை Apollo Hospitals Group பெற்றுள்ளது.

ஆந்திராவில் உள்ள கிராமமான அரகொண்டாவைச் சேர்ந்தவர் பிரதாப் ரெட்டி. இவர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்தவர். அதன் பிறகு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருதய மருத்துவ பயிற்சியை டாக்டர்.பிரதாப் ரெட்டி பெற்றுள்ளார். பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் டாக்டர்.பிரதாப் ரெட்டி தனது பெல்லோஷிப்பைப் பெற்றார். டாக்டர்.பிரதாப் ரெட்டி பல ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தலைமை தாங்கி தொடர்ந்து பல ஆண்டுகள் அமெரிக்காவின் மிசோரி ஸ்டேட் மார்பு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர் தனது தந்தையின் விருப்பப்படி 1971-ல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

டாக்டர்.பிரதாப் ரெட்டியின் Corporate Hospital கனவு நிறைவேறியது

உலகத்தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனையை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்று டாக்டர்.பிரதாப் ரெட்டி கனவு கண்டு வந்தார். அவர் 1983-ல் சென்னையில் 150 படுக்கைகள் கொண்ட Apollo Hospitals-யை நிறுவி தனது கனவை நினைவாக்கினார். 4000-க்கும் மேற்பட்ட உயர்தர (Apollo Hospitals Success Story) மருத்துவர்கள் மற்றும் 65,000-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இந்த Apollo Hospitals குழுமத்தில் பணிபுரிகின்றனர். 120 நாடுகளைச் சேர்ந்த 42 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளது.

Apollo Hospitals Success Story - Gistakmedia

Apollo Hospitals Group பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் (Apollo Hospitals Success Story)

● டாக்டர்.பிரதாப் ரெட்டி 2017 ஆம் ஆண்டில் India Today-யின் இந்தியாவின் 50 மிக சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலில் 48 வது இடத்தைப் பெற்றார்.
● இவர் 1991-ம் ஆண்டில் ‘பத்ம பூஷன்’ கௌரப் பட்டம் பெற்றார்.
● இவர் 2010-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ பட்டம் பெற்றார்.
● இவர் 2018-ம் ஆண்டில் அப்போலோ மருத்துவமனையால் லயன்ஸ் (Apollo Hospitals Success Story) மனிதாபிமான விருது பெற்றார்.
● டாக்டர்.பிரதாப் ரெட்டி 2022-ம் ஆண்டில் IMA வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார்.

Apollo Hospitals குழுமத்தை கெளரவிக்கம் வகையில் இந்திய அரசு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு உள்ளது. Apollo Hospitals தொடர்ந்து தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது. News Week 2022-ம் ஆண்டில் Apollo-வின் இருதயவியல் துறையை இந்தியாவில் சிறந்ததாகவும், மற்றும் உலகளவில் 126ஆவது இடமாகவும் அங்கீகரித்துள்ளது. The Times Of India மற்றும் The Week போன்ற வெளியீடுகளால் ஒரு முன்னணி Multi Speciality Hospital ஆக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

Apollo Hospitals குழுமத்தை திறம்பட நிர்வகித்து வரும் டாக்டர்.பிரதாப் ரெட்டி கடந்த ஆண்டின் இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் 94 வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். இது 9/10/2024 தேதி அன்று Forbes வெளியிட்ட அறிக்கை ஆகும்.

Apollo Hospitals Group-ன் சீரிய சமுதாய தொண்டுகள்

Apollo Hospitals Group ஆனது டாக்டர்.பிரதாப் ரெட்டியின் தலைமையின் கீழ்,

● SACHi, The Indian Head Injury Foundation (IHIF),
● மற்றும் ‘Distance Healthcare Advancement’ (DISHA)

போன்றவற்றின் மூலம் பலருக்கு மருத்துவ பரோபகாரப் பணிகளை மேற்கொண்டு சேவை செய்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top