Apologies To Ajith Fan : கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர் தலைவணங்கி மன்னிப்பு
நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தீனா திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது. ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், சென்னை காசி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் விஜய்யின் கில்லி படத்தின் பேனரை கிழித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, பேனரை கிழித்த வாலிபர் தலைவணங்கி மன்னிப்பு (Apologies To Ajith Fan) கேட்டுள்ளார்.
கில்லி ரீ ரிலீஸ் :
நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. மெகா ஹிட் ஆகி வசூலை அள்ளிய இப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது. வழக்கமாக ரீ-ரிலீஸ் ஆன படங்களைப் போல ஒருவித வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட கில்லி, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கில்லி படத்தை தியேட்டர்களில் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு பிறகு வெளியானாலும் கில்லி படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.
தீனா ரீ ரிலீஸ் :
இதனிடையே, மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் அவரது நடிப்பில் 2001 இல் வெளியான தீனா திரைப்படம் தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாள் என்பதால் அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். ரசிகர்கள் படத்தை ரகளை செய்து ரசித்தனர். அப்போது தீனாவும், கில்லியும் ஒன்றாக ஓடும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னையில் உள்ள காசி திரையரங்கில் தீனா ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்களால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் அங்கு வந்து ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த கில்லி பேனரை கிழித்து எறிந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களை கோவத்தில் ஆழ்த்தியது. இது குறித்த புகாரின் பேரில் கில்லி பேனரை கிழித்த எபினேஷை போலீசார் கைது செய்தனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
தலைவணங்கி மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர் - Apologies To Ajith Fan :
கில்லி பேனரை கிழித்ததற்காக எபினேஷ் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ (Apologies To Ajith Fan) வெளியானது. இதுபற்றி பேசிய எபினேஷ், ‘பசங்களோட காசி தியேட்டருக்கு காலை 11 மணிக்கு தீனா படம் பார்க்க போயிருந்தேன். அப்போது அந்த தியேட்டரில் கில்லி பேனர் இருந்தது. பசங்ககூட என்ஜாய் பண்றதுக்காக பைக் சாவியால் கில்லி பேனரை கிழித்தேன். இதற்கு அண்ணன் விஜய் அவர்களிடமும், தமிழக வெற்றிக் கழக நண்பர்களிடமும் மன்னிப்பு (Apologies To Ajith Fan) கேட்டுக் கொள்கிறேன். இதுபோல இனி செய்ய மாட்டேன் என்பதையும் தலை வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்’ என எபினேஷ் கூறியுள்ளார்.
Latest Slideshows
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!