Gistak Media

Are You Ok Baby Trailer : 'ஆர் யூ ஓகே பேபி' படத்தின் டிரைலர் வெளியீடு

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ஆர் யூ ஓகே பேபி படத்தின் டிரைலர் (Are You Ok Baby Trailer) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வறுமையில் மெடிக்கலில் இருந்து மருந்து திருடும் கணவர், குற்றவாளியாக சித்தரிக்கப்படும் பெண், வழக்கறிஞரின் விசாரணை என டிரைலரில் (Are You Ok Baby Trailer) வரும் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பை காட்டுகிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சில காரணங்களால் குடும்ப பிரச்சனைகளை கையாளும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ சங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் பவல் நவநீதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார்.

Are You Ok Baby Trailer :

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் (Are You Ok Baby Trailer) வெளியாகியுள்ளது. முதலில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சமுத்திரக்கனியும், அபிராமியும் குழந்தையை இழந்து தேடி அலைகிறார்கள். இதனிடையே வறுமையில் மெடிக்கலில் இருந்து மருந்து திருடும் கணவர், குற்றவாளியாக சித்தரிக்கப்படும் பெண், வழக்கறிஞரின் விசாரணை என டிரைலரின் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பைக் காட்டுகிறது. இதற்கிடையில், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைக்காட்சியில் வரும் லட்சுமி ராமகிருஷ்ணனும் வந்து செல்கிறார். இதன் மூலம் ஆர் யூ ஓகே பேபி, ஒரு குழந்தைக்காக இருவர் சண்டை போடும் கதையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் பற்றி பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளதாகவும், இதன் மூலம் மக்களிடம் கதை சொல்ல முயற்சிப்பதாகவும் கூறினார். மேலும் இது சொல்லப்பட வேண்டிய கதை என்றும் இளையராஜா தனது இசையில் படத்தில் மேஜிக் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top