நாசாவானது 54 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை ஓரியன் விண்கலம் மூலம் நிலவுக்கு அனுப்புகிறது. ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக், மற்றும் ஜெரெமி ஹேன்சன் ஆகிய ஓரியன் விண்வெளி வீரர்கள் இந்த மிஷனில் 10 நாட்கள் பயணித்து நிலவை சுற்றி வந்து பூமிக்கு திரும்புவார்கள். இந்த விண்வெளி பயணத்தில் ஓரியன் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு சந்திரனின் மறுபக்கத்தைச் சுற்றி வருகிறது. இது ஒரு வரலாற்று பயணமாகும் (Artemis II First Crewed Lunar Mission).
ஆர்டெமிஸ் II மிஷனில் ஏற்படும் 40 நிமிட தொடர்பு துண்டிப்பு
இது நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II First Crewed Lunar Mission) விண்வெளிப் பயணத்தில் விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையே நிகழும் ஒரு தற்காலிக துண்டிப்பு நிகழ்வாகும். இது விண்கலத்தில் ஏற்படும் ஏதேனும் இயந்திரக் கோளாறு காரணமாகவோ மற்றும் இயந்திர தோல்வி காரணமாகவோ கிடையாது. இது நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கும்போது தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்ற ஒரு இயற்கையான தடையாகும். நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II First Crewed Lunar Mission) விண்வெளிப் பயணத்தில் இந்த 40 நிமிட தொடர்பு துண்டிப்பு ஆனது ஓரியன் (Orion) விண்கலம் நிலவைச் சுற்றி வரும்போது, அது நிலவின் மறுபக்கத்திற்கு (Far side of the Moon) செல்லும்போது நிகழ்கிறது. பூமியில் உள்ள ஆண்டெனாக்களுக்கு வானொலி சமிக்ஞைகள் சென்றடைவதை சந்திரப் பொருள் தடுக்கிறது.
இந்த நிகழ்விற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு
● நிலவினால் ஏற்படும் குறுக்கீடு
நிலவின் பின்புறமாக ஓரியன் விண்கலம் பயணிக்கும் போது, பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையே நிலவு ஒரு தடையாக (Physical Barrier) இருக்கிறது.
● ரேடியோ அலைகளின் நேர்க்கோட்டுப் பார்வை (Line-of-Sight) தடைகள்
விண்வெளித் தகவல் தொடர்பு அமைப்புகள் எல்லாம் தற்போது ரேடியோ அலைகளின் நேர்க்கோட்டுத் தொடர்பைச் சார்ந்து செயல்படுகின்றன. விண்வெளித் தொடர்பு, சிக்னல்களை அனுப்பத் தடையற்ற நேரடிப் பாதை ஆனது தேவைப்படுகிறது. நிலவின் கடினமான மேற்பரப்பு ஆனது இந்த சிக்னல்களைத் தடுப்பதால், சிக்னல் பாதையானது துண்டிக்கப்படுகிறது. அதனால் நிலவின் பின்புறமாக ஓரியன் விண்கலம் பயணிக்கும் போது நிலவானது சிக்னல்களைத் தடுப்பதால், பூமியில் உள்ள நாசாவின் ஆழமான விண்வெளி நெட்வொர்க்கால் (Deep Space Network) விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியாது.
● Artemis II First Crewed Lunar Mission : குரல் (Voice), வீடியோ அல்லது டெலிமெட்ரி (Telemetry) தரவு தடைகள்
இந்த 40 நிமிட சிக்னல்கள் முடக்கம் காரணமாக விண்வெளி வீரர்களின் குரல் (Voice), வீடியோ மற்றும் டெலிமெட்ரி (Telemetry) தரவுகள் என எதையுமே பூமிக்கு அனுப்பவோ அல்லது பூமியிலிருந்து பெறவோ முடியாது. இதனால் விண்கலத்தில் உள்ள குழுவினருக்கும் தரையில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையேயான தொடர்புகள் ஆனது 40 நிமிடங்கள் துண்டிக்கப்படுகின்றது.
இந்தக் 40 நிமிட தொடர்பு துண்டிப்பு நேறத்தில், ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள் முன் திட்டமிடப்பட்ட செயல்முறைகள் மற்றும் தானியங்கி அமைப்புகளைச் சார்ந்து, சுதந்திரமாகச் செயல்படப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மேலும் நாசா செவ்வாய் கிரகத்திற்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலைகளில் விண்வெளி குழுவினரும் அமைப்புகளும் எவ்வாறு செயல்பட போகின்றன என்பதை மதிப்பிடுவதற்கு ஆர்டெமிஸ் II (Artemis II First Crewed Lunar Mission) ஒரு வாய்ப்பை வழங்குகிறது.