NASA-வின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கல திட்டம் ஆனது விண்வெளி பயண சோதனை திட்டம் ஆகும். இந்த Artemis II விண்கலம் ஆனது 2026 ஏப்ரலில் விண்ணில் ஏவப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பின் அதாவது Apollo 17-க்குப் பின் முதல் மனிதர்கள் கொண்ட நிலவு சுற்றுப்பயணமாகும். இந்த ஆர்ட்டெமிஸ் 2 திட்டம் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிலவுக்கு மனிதர் பயணம் மேற்கொள்ள ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயாரித்து மனிதர்களை மீண்டும் நிலவை நோக்கி அனுப்ப முயற்சிக்கும் திட்டம் ஆகும்.
ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தின் விண்கல குழு (Artemis II)
இந்த விண்கலத்தில் ரீட் வைஸ்மேன் (Reid Wiseman), விக்டர் குளோவர் (Victor Glover), கிறிஸ்டினா கோச் (Christina Koch) மற்றும் ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) ஆகிய விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி 10 நாட்கள் பயணம் செய்வார்கள். இந்த விண்கல குழுவானது அங்கு நீண்ட கால ஆய்வு மற்றும் விஞ்ஞான செயல்பாடுகளை மேற்கொண்டு (Artemis II) செயல்படும். Artemis திட்டங்கள் எல்லாம் NASA-வின் சந்திரனை ஆய்வு செய்யும் மிகப்பெரிய முயற்சி திட்டங்கள் ஆகும். Artemis திட்டம் 1 ஆனது 2017-ல் தொடங்கி 2022-ல் வெற்றிகரமாக முடிந்தது. சந்திரனை மீண்டும் ஆய்வு செய்யும் Artemis திட்டம் 2 ஆனது அதிக தொழில்நுட்ப சவால்களைக் கொண்ட திட்டம் ஆகும். இந்தப் பயணத்தின் நோக்கம் ஆனது நிலவில் மனிதர்களை தரையிறக்கி, அங்கு நீண்ட கால ஆய்வு மற்றும் விஞ்ஞான செயல்பாடுகளை மேற்கொள்வதாகும். இது ஒரு மிகப்பெரிய முயற்சி ஆகும்.
ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் வருங்கால இலக்குகள்
- நிலவில் நிரந்தர இருப்பை ஏற்படுத்துவதும், சந்திரப் பொருளாதாரத்தை உருவாக்குவதும், மற்றும் செவ்வாய் பயணங்களுக்கு அடித்தளமிடுவது ஆகும்.
- விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடமாகவும், மற்றும் ஆய்வுக்கான தளமாகவும் Lunar Gateway என்ற சுற்றுச்சூழல் நிலையத்தை நிலவு சுற்றுப்பாதையில் 2030-களில் அமைப்பதாகும்.
- தெற்கு துருவத்தில் Artemis Base Camp உருவாக்கி, சூரிய ஒளியில் இயங்கும் வாழ்க்கை ஆதரவு, மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்புகளை சோதிப்பதாகும்.
- Water ice-ஐ பயன்படுத்தி ஆக்ஸிஜன், எரிபொருள் உற்பத்தி செய்யும் in-situ resource utilization (ISRU) தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகும். இந்த தொழில்நுட்பம் ஆனது விண்வெளி பயணங்களுக்கான செலவை குறைக்கும்.
- தனியார் நிறுவனங்களுடன் (SpaceX, Blue Origin) கூட்டு சேர்ந்து வணிக சுற்றுலா, சுரங்கம், சாதனை உற்பத்திகளை ஊக்குவிப்பதாகும்.
- நிலவை Gateway-ஆகப் பயன்படுத்தி Deep Space பயணங்களுக்கு பயிற்சி அளிப்பது.
- 2030-களின் பிற்பகுதியில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்புதல்.
- Gateway-யை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை (radiation protection, long-duration life support) சோதனை செய்தல்.