Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உண்மையான ரத்தம் போலவே ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் செயற்கை ரத்தத்தை (Artificial Blood) உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கை ரத்தம் ஆனது எல்லா வகை ரத்தத்திற்கும் ஏற்றதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசர காலங்களில் குறிப்பிட்ட ரத்த வகையைத் தேடி அலையும் அவஸ்தை ஆனது நீங்கும் என் நம்பப்படுகிறது.
செயற்கை ரத்தம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
காலாவதியான ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபின் (சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரதம்) ஆனது எடுக்கப்பட்டுகிறது. பின்பு ஹீமோகுளோபின் வெசிகல்ஸ் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஹீமோகுளோபின்கள் நுண்ணிய சின்ன காப்ஸ்யூல்களாக உருவாக்கப்படுகிறது. இதுவே இதன் அடிப்படை ஆகும். இந்த நுண்ணிய சின்ன காப்ஸ்யூல் என்பது அளவில் (Artificial Blood) மிக மிக சிறியது ஆகும். அதாவது சுமார் 250 நானோமீட்டர் அகலம் மட்டுமே அவை பெற்றிருக்கும். அதாவது அளவில் மிக மிக சிறியதாக ஒரு முடியை விட 4,000 மடங்கு மெல்லியதாக அவை இருக்கும். இந்த காப்ஸ்யூல்கள்தான் ரத்த ஓட்டத்தில் கலந்து மற்றும் மிதந்து, உடலில் இருக்கும் இயற்கை சிவப்பு ரத்த அணுக்கள் போலவே ஆக்சிஜனை வெளியேற்றும்.
செயற்கை ரத்தத்தின் சிறப்பு பலன்கள் (Artificial Blood)
● இந்த செயற்கை ரத்தம் சிறிய குமிழ்களாக அடைக்கப்பட்டு பாதுகாப்பாகவும் மற்றும் எளிதாகவும் சேமிக்கலாம்.
● இந்த செயற்கை ரத்தம் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். வழக்கமாக மனிதர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டு சேமித்து வைக்கப்படும் ரத்தம் (Artificial Blood) ஆனது சில வாரங்கள் முதல் அதிகபட்சம் சில மாதங்கள் வரை மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் வரை இந்த செயற்கை ரத்தம் நன்றாக இருக்கும்.
●வைரஸ் பாதிப்பு பற்றிய அச்சம் தேவையில்லை. பொதுவாக மனிதர்களிடமிருந்து தானமாக ரத்தம் பெறப்படும்போது வைரஸ் பாதிப்பு அச்சம் இருக்கும். அந்த ரத்தத்தில் வைரஸ் இருந்தால் அது ரத்தம் பெறுபவரையும் பாதிக்கும். ஆனால், செயற்கை ரத்தத்தில் தொற்று நோய் ஆபத்துகள் இல்லை.
●ரத்தம் தேவைப்படும் மருத்துவ அவசர காலங்களில் குறிப்பிட்ட ரத்த வகையை தேடி அலைய வேண்டியிருக்கும். பொதுவாக எமர்ஜென்சி காலத்தில் O Positive போன்ற ரத்தம் எளிதாக கிடைக்கும். ஆனால், சில குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் அவை கிடைக்காது. ஆனால், செயற்கை ரத்தம் ஆனது எல்லா வகை ரத்தத்திற்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால் மருத்துவ அவசர காலங்களில் குறிப்பிட்ட வகை ரத்தத்தை தேடி அலைய வேண்டிய கஷ்டம் இருக்காது.
வெற்றிகரமான சோதனைகள்
● முதற்கட்ட செயற்கை ரத்த சோதனையை விஞ்ஞானிகள் ஜப்பானில் நடத்தினர். விஞ்ஞானிகள் தன்னார்வலர்களுக்கு 10-100 மில்லி வரையிலான செயற்கை (Artificial Blood) ரத்தம் செலுத்தினர். அதன் பிறகு விஞ்ஞானிகள் நடத்திய சோதனைகளில் செயற்கை ரத்தம் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது
●இதன் இரண்டாம் கட்ட சோதனையில் விஞ்ஞானிகள் இப்போது அதிக அளவுகளில் (400 மில்லி வரை) செயற்கை ரத்தத்தை செலுத்தி பரிசோதித்து வருகின்றார்கள். செயற்கை ரத்தத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் தற்காலிக காய்ச்சல் அல்லது லேசான ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற லேசான பக்க விளைவுகள் மட்டுமே விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் இல்லை.
●விஞ்ஞானிகளின் சோதனைகள் தொடர்கின்றன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்து அதன் முடிவுகள் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் அது மருத்துவ உலகில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்கும்.
●முழுமையான வெற்றிகரமாக முடிவுகளால் 2030-ல் இந்த செயற்கை ரத்தம் முழுமையாக மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்கு வரும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!