Ashes Series 2023 : டிக்ளர் செய்யும் முடிவில் மீண்டும் தவறு, பென் ஸ்டோக்ஸ் மீது குவியும் விமர்சனங்கள்...
Ashes Series 2023 :
ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்தது. இந்தப் போட்டியிலும் டிக்ளேர் செய்வது குறித்து தவறு செய்தார் என ஸ்டோக்ஸ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்டோக்ஸ் கோபமாக பதில் அளித்தார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணியால் இந்த கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி மெக்கல்லம் பயிற்சியாளராக வந்தவுடன் பேஸ் பால் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது என்னவென்றால் டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓவர் போட்டி போன்று அதிரடியாக விளையாடுவதை குறிப்பது. ஆனால் இந்தத் திட்டத்தால் கூட இங்கிலாந்தால் வெல்ல முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடுவதே இதற்கு காரணம். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் கூட தொடர் டிராவில் தான் முடியும். இதனால் ஆஸ்திரேலியா அணி கோப்பையை தக்க வைத்துள்ளது.
இதனால் இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் மனது சுக்கு நூறாக உடைந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தாமதமாக டிக்ளேர் செய்ததே இதற்கு காரணம் என விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. முதல் இன்னிங்ஸில் 592 ரன்கள் குவித்த பிறகு தான் டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி குறித்து இங்கிலாந்தின் கேப்டன் ஸ்டோக்ஸிடம் கேட்டபோது போட்டியின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. முதல் மூன்று நாட்கள் நாங்கள் சிறப்பாக விளையாடினோம் ஆனால் இறுதியில் மழை வந்து போட்டி சமமானது மிகவும் வேதனை அளிக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் இதுவும் ஒரு அனுபவம் தான் என கூறியுள்ளார். வாழ்வா சாவா என்ற நிலையில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த போட்டியை மறந்து நிச்சயம் அடுத்து போட்டியில் களம் இறங்குவோம். பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.
நிச்சயம் தொடரை சமன் செய்வோம் :
ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன. இப்படி விமர்சனம் செய்பவர்கள் எங்கள் கிரிக்கெட்டை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். நிச்சயம் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வது தான் எங்களுடைய இலக்கு என்று கூறியுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!