Ashok Selvan Marriage : நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்
Ashok Selvan Marriage : நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் :
- நடிகர் அசோக் செல்வன் ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் பிரபலமானார், அதைத் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை போன்ற படங்கள் இவருக்கு பெரும் பாராட்டை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிகர் சரத் குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
- கீர்த்தி பாண்டியன் 2019-ம் ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்கான ‘அன்பிர்கினியாள்’ படத்தின் மூலம் பிரபலமானார், தற்போது அசோக் செல்வனுக்கு ஜோடியாக ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
Ashok Selvan Marriage - கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்த அசோக் பாண்டியன் :
நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியனின் இளைய மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக திருமணம் (Ashok Selvan Marriage) நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, இவர்களின் அறிமுகம் காதலாக மலர்ந்தது. அதன்பின்னர் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அசோக் செல்வன் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருநெல்வேலியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் திருமணம் (Ashok Selvan Marriage) நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை திருமணம் நடைபெற்ற நிலையில், காலை 8 மணி முதல் பெரிய விருந்து நடக்கிறது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் தங்கள் திரையுலக நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். நடிகையும், நடிகர் அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியன் திருமண விழாவில் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு