Gistak Media

Asia Cup 2025 India Vs PAK : ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்​தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்​தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை (Asia Cup 2025 India Vs PAK) நடத்தவுள்ளன. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ‘A’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகளும், ‘B’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான்,வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 1 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில், இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். இதில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எளிதில் வீழ்த்தியது. அதைப்போலவே பாகிஸ்தான் அணியும் முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை வென்றுள்ளது. மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியாவிற்கு இன்று நடைபெறும் போட்டியின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே சமயத்தில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா தவிர்த்து இருக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்​தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

இந்நிலையில் இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் (Asia Cup 2025 India Vs PAK) பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா என இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது.

இந்தியா Vs பாகிஸ்தான் நேருக்கு நேர் (Asia Cup 2025 India Vs PAK)

Asia Cup 2025 India Vs PAK - Gistakmedia

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 10 போட்டிகளில் வெற்றி பெற, பாகிஸ்தான் (Asia Cup 2025 India Vs PAK) அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஆசியக் கோப்பையில் இரண்டு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற, பாகிஸ்தான் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஆசியக் கோப்பையில் 2023-ம் ஆண்டில் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதியதில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா : சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

பாகிஸ்தான் : அலி ஆகா (கே), ஹசன் நவாஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், சல்மான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top