Gistak Media

Asia Cup 2025 India Vs UAE : ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்​தியா - ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன

8 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நேற்று முதல் துபாய் மற்​றும் அபு​தா​யில் நடை​பெற்று வரு​கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடை​பெறும் இன்றைய ஆட்​டத்​தில் இந்​தியா – ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் (Asia Cup 2025 India Vs UAE) பலப்பரீட்சை நடத்துகின்றன. சுமார் 7 மாத காலம் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடுவதால், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை (Asia Cup 2025 India Vs UAE)

இந்திய அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் திரும்பியிருப்பது, பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த போட்டியில் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுடன், சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், விக்கெட் கீப்பருக்கான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மா புதிய விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். மேலும் இந்திய அணியின் வியூகத்தை பொறுத்து, ஜிதேஷ் சர்மா 6வது அல்லது 7வது வரிசையில் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் மிடில் ஆர்டரில் திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மற்றும் 8வது இடத்தில அக்சர் படேல் ஆகியோர் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஃபினிஷர் ரோலில் ரிங்கு சிங் இறங்கினால் அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்படும்.

இந்திய அணியின் பந்துவீச்சுப் பொறுத்தவரை, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் உறுதியாகிவிட்டது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் (Asia Cup 2025 India Vs UAE) அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் துபாய் ஆடுகளங்கள் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Asia Cup 2025 India Vs UAE - Gistakmedia

அணி​கள் விவரம்

இந்​தி​யா : சூர்​யகு​மார் யாதவ் (கேப்​டன்), திலக் வர்​மா, ஷிவம் துபே, ஹர்​திக் பாண்​டி​யா, சஞ்சு சாம்​சன், ஷுப்​மன் கில் (துணை கேப்​டன்), அபிஷேக் சர்​மா, ரிங்கு சிங், அக்​சர் படேல், ஜிதேஷ் சர்​மா, ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்​தி, அர்​ஷ்தீப் சிங், குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா.

ஐக்​கிய அரபு அமீரகம் : முஹம்​மது வசீம் (கேப்​டன்), ஆசிப் கான், அலிஷன் ஷரபு, ஹர்​ஷித் கவுஷிக், ஆர்​யன்ஷ் ஷர்​மா, துருவ் பராஷர், ஈதன் டிசோ​சா, ஹைதர் அலி, ஜுனைத் சித்​திக், மதி​யுல்லா கான், முஹம்​மது ஃபரூக், ராகுல் சோப்​ரா, முஹம்​மது ஜவதுல்​லா, முஹம்​மது ஜோஹைப், ரோஹித் கான், சிம்​ரன்​ஜீத் சிங், சாகிர் கான்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top