Asia Cup Final 2025 : ஆசிய கோப்பை இறுதிப் போட்டி.. இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.!
41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக இறுதிப் போட்டியில் இன்று (Asia Cup Final 2025) மோத உள்ளன. 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், இலங்கையும் வங்கதேசமும் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டி
ஆசிய கோப்பை வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி இந்தியாவுடனான லீக் சுற்றில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. மேலும் இரு அணிகளுக்கு இடையே லீக் சுற்றுப் போட்டிகளில் சண்டை சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இன்றைய ஆட்டம் ரசிகர்களிளுக்கு மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதேசமயத்தில் 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்த வரையில் அபிஷேக் சர்மா,ஷுப்மன் கில், ஷிவம் துபே, சூர்யகுமார், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா என பெரிய பட்டாளமே உள்ளது. பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
இந்தியா 8 முறை சாம்பியன்(Asia Cup Final 2025)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இந்திய அணி 1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023 என 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டியிலும், ஒரு முறை டி20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா சாம்பியன் பட்டம் சூடி உள்ளது. மேலும் பாகிஸ்தான் (Asia Cup Final 2025) அணி ஆசிய கோப்பை தொடரில் 2000 மற்றும் 2012-ம் ஆண்டு என 2 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேசமயத்தில் டி20 வடிவில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
களத்தில் தடுக்க மாட்டேன்
ஆசிய கோப்பை இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது, ‘மைதானத்தில் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஒரு வேகப்பந்து வீச்சாளர் உணர்ச்சிகளைக் காட்டுவதைத் தடுத்தால், பிறகு என்ன மிஞ்சும்? அது அவமரியாதையாக இல்லாத வரை நான் யாரையும் தடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!