Asia Cup Hockey 2025 : ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை (Asia Cup Hockey 2025) படைத்திருக்கிறது. இதன் மூலம் 2026-ம் ஆண்டு பெல்ஜியத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில், தோல்வியை தழுவாத இந்திய அணி, தென் கொரியா அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்த இறுதிப் போட்டியில் ஆக்ரோஷமாக, விளையாடிய இந்திய அணியில் சுகுஜித் சிங் முதல் நிமிடத்திலேயே அபாரமாக கோலடிக்க இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மேலும் ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இந்திய வீரர்கள் அதனை கோலாக மாற்றும் வாய்ப்பினை தவறவிட்டனர். இந்நிலையில் ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கூட்டு முயற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் சஞ்சய், கேப்டன் ஹர்மன்பிரித் ஆகியோர் பந்தை கடத்தி கொடுக்க, அதனை தில்பிரீத் சிங் அபாரமாக அடித்து கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது. இந்த நிலையில், பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்த தென் கொரிய அணி பதில் கோல் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடியது.
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை
மறுபுறம் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி கோல் கணக்கை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தருணத்தில் போட்டியின் 45வது நிமிடத்தில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் தில்பிரீத் சிங், தனது இரண்டாவது கோலை அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி 15 நிமிடத்தில் தென் கொரிய அணி கடுமையாக போராடியும் இந்திய வீரர்களின் தற்காப்பு ஆட்டத்தை அதனால் தடுக்க முடியவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய அணி 50-வது நிமிடத்தில் 4வது கோலை அடித்தது. 50 நிமிடத்திற்கு பிறகு முதல் கோலை அடித்த தென் கொரிய அதற்குப்பின் அதனால் மேலும் கோல்களை அடிக்க முடியவில்லை.
சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி (Asia Cup Hockey 2025)
ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரித் தலைமையிலான இந்திய அணி, தென் கொரியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!