Gistak Media

Asia Cup India Beat Oman By 21 Runs : ஆசிய கோப்பை கடைசி லீக்கில் ஓமனை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் ‘A’ பிரி​வில் அபு​தாபி​யில் உள்ள ஷேக் சயீத் மைதானத்​தில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஓமன் (Asia Cup India Beat Oman By 21 Runs) அணி​கள் மோதின. இந்​திய அணி​யில் வருண் சக்​ர​வர்த்தி, ஜஸ்​பிரீத் பும்​ரா ஆகியோ​ருக்கு பதிலாக ஹர்​ஷித் ராணா, அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் புதிதாக அணியில் சேர்க்​கப்​பட்​டனர்.

இந்திய அணி பேட்டிங்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்​சன் 45 பந்​துகளில் 3 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் குவித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அபிஷேக் சர்மா 15 பந்​துகளில் 2 சிக்​ஸர்​, 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்த நிலை​யில் ராமானந்தி பந்​தில் வெளி​யேறி​னார். பிறகு அக்சர் பட்டேல் (26 ரன்கள்) திலக் வர்மா (29 ரன்கள்) ஆகியோரது ரன் குவிப்பால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 188 ரன்கள் குவித்தது.

Asia Cup India Beat Oman By 21 Runs - Gistakmedia

ஓமன் அணிக்கு 189 ரன்கள் இலக்கு (Asia Cup India Beat Oman By 21 Runs)

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். ஓமன் அணியின் கேப்டன் ஜேட்டிந்தர் சிங் 32 ரன்கள், ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹமாத் மிஸ்ரா 51 ரன்கள் எடுத்து சிறப்பான அடித்தளத்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தபோதும், பின்னர் இறங்கிய வீரர்களால் ஓமன் அணியை வெற்றி (Asia Cup India Beat Oman By 21 Runs) பாதைக்கு இழுத்து செல்ல முடியவில்லை. கடைசியில் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன் பெற்றார். ஆசிய கோப்பை லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top