Gistak Media

Asia Cup Super 4 : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் போட்டி துபாய் மற்றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடர் தற்​போது சூப்​பர் 4 கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இதில் சூப்பர் 4 சுற்றின் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்​தியா – பாகிஸ்​தான் (Asia Cup Super 4) அணி​கள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி 'A' பிரி​வில் முதலிடம்

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி ஆசிய கோப்பை லீக் சுற்​றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று ‘A’ பிரி​வில் முதலிடம் பிடித்தது. முதல் ஆட்​டத்​தில் 9 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்​தை​யும், 2வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை​யும், 3வது ஆட்​டத்​தில் 21 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​ல் ஓமன் அணியையும் இந்​திய அணி வீழ்த்​தி​யிருந்​தது. அதே சமயத்தில் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்​றின் முடிவில் 2 வெற்​றி, ஒரு தோல்வியுடன் 2வது இடம் பிடித்தது.

Asia Cup Super 4 - Gistakmedia

இந்திய வீரர்கள் கைகுலுக்​க​வில்​லை (Asia Cup Super 4)

ஆசிய கோப்பை லீக் சுற்​றின் டாஸ் போடும் போதும், போட்டி நிறைவடைந்த பின்​னரும் பாகிஸ்​தான் வீரர்​களு​டன் இந்​திய வீரர்கள் கைகுலுக்​க​வில்​லை. இந்த நிலை சூப்பர் 4 சுற்றின் இன்​றைய ஆட்​டத்​தி​லும் தொடரக்​கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஓமன் அணிக்கு எதி​ரான போட்டியில் ஓய்வில் இருந்த ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி மீண்​டும் அணியில் களமிறங்க உள்ளதால் பந்து வீச்சு வலு​வடை​யும். லீக் சுற்​றின் பீல்​டிங்​கின் போது அக்​சர் படேல் தலை பகு​தி​யில் காயம் அடைந்​திருந்​தார். எனினும் அவர் நலமுடன் இருப்​ப​தாக அணி​யின் பயிற்​சி​யாளர் தெரி​வித்​துள்​ளார். பேட்​டிங்​கில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் அரை சதம் விளாசிய சஞ்சு சாம்​சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் (Asia Cup Super 4) சூர்​யகு​மார், திலக் வர்​மா, ஷிவம் துபே, ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர்.

சர்​வ​தேச கிரிக்​கெட் போட்டிகளில் ஒரு​காலத்​தில் வீழ்த்த முடி​யாத அணி​யாக திகழ்ந்த பாகிஸ்​தான் தற்​போது திறன் குறைந்து காணப்​படு​கிறது. பாகிஸ்தான் அணியின் பேட்​டிங்​கில் பஹர் ஸமான் மட்​டுமே நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய வீரராக உள்​ளார். தொடக்க வீர​ரான சைம் அயூப் இரு ஆட்​டங்​களில் டக் அவுட் ஆகி உள்​ளார். எனினும் பந்து வீச்சில் அவர், கைகொடுத்து வரு​கிறார்.

உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா : சூர்யகுமார் யாதவ் (கே), திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், திலக் வர்மா, அக்சர் படேல், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

பாகிஸ்தான் : அலி ஆகா (கே), சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், ஹசன் நவாஸ், ஷாஹீன் ஷா அப்ரிடி, சல்மான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப்,சுபியான் முகீம், அப்ரார் அகமது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top