Gistak Media

Asian Youth Games 2025 : ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி..!

2025-ம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை மனாமாவில் நடைபெறுகிறது. இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டில் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்றிருந்தது. அதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய இளைஞர் விளையாட்டு தொடர் தற்போது நடைபெறுகிறது. இதில் மொத்தம் 19 விளையாட்டுகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர். இதில் பஹ்ரைனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை (Asian Youth Games 2025) படைத்துள்ளது. 

இந்திய மகளிர் கபடி அணி, லீக் சுற்றுகளில் வங்கதேசத்தை 46-18, தாய்லாந்தை 70-23, இலங்கையை 73-10 மற்றும் ஈரானை 59-26 என்ற கணக்கில் வீழ்த்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் முதலிடத்தில் இருந்தது. ரவுண்ட் ராபின் போட்டிகளுக்குப் பிறகு குரூப் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களில் இருந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்தியா Vs ஈரான் மோதல் (Asian Youth Games 2025)

ஆசிய இளையோர் மகளிர் கபடி இறுதிப் போட்டியில், இந்திய அணியும் ஈரான் அணியும் மோதின. இதில், இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி 75 – 21 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்திய மகளிர் அணியில், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் வீராங்கனை கார்த்திகா இடம்பெற்றிருந்தார். அவரின் சிறப்பான ஆட்டம், இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தது. கார்த்திகாவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் படித்து (Asian Youth Games 2025) வருகிறார். தங்கப் பதக்கம் வென்றது குறித்து கார்த்திகா கூறியுள்ளதாவது, இதுதான் நான் விளையாடி வாங்கிய முதல் மெடல். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. கண்ணகி நகரில் இருந்து மெடல் வாங்கி இருப்பதால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

யார் இந்த கண்ணகி நகர் கார்த்திகா?

இந்திய மகளிர் கபடி அணியின் துணை கேப்டனான கார்த்திகா சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். கார்த்திகாவின் தந்தை கட்டட தொழிலாளியாவார். இவரது தாயார் முதலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். கார்த்திகா தனது சிறுவயதில் இருந்தே கபடியின் மீது பேரார்வம் கொண்டிருந்ததை தொடர்ந்து, 6-ம் வகுப்பில் இருந்து கபடி விளையாடி வருகிறார், அப்போது இருந்தே கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட இவர், தமிழ்நாடு மகளிர் அணியின் கேப்டனாகவும் உள்ளார். 18 வருடங்களுக்கு பிறகு (Asian Youth Games 2025) தமிழ்நாட்டில் இருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் கார்த்திகா இடம்பிடித்திருக்கிறார்.

Asian Youth Games 2025 - Gistakmedia

இந்தியாவுக்கு இரட்டைத் தங்கம்

இந்திய மகளிர் அணியை போல் இந்திய ஆடவர் கபடி அணியும் இறுதிப்போட்டியில், ஈரானை 35 – 32 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. கபடியில் இந்தியா இரட்டைத் தங்கம் வென்றுள்ளதால் நாடு முழுவதும் உள்ள கபடி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top