AUS Vs ENG 5th Test Draw: இங்கிலாந்து அணி அபார வெற்றி, கடைசி போட்டியில் பிராட் அசத்தல்...
AUS Vs ENG 5th Test Draw :
ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டி பெரும் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆகி உள்ளது.
ஆஷஸ் தொடர் :
நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஏற்கனவே இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி விட்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 283 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது. அடுத்ததாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 295 ரன்களுக்குள் மடக்கியது. மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் அருமையாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் அரை சதம் அடித்து நிதானமாக விளையாடினர். கடைசி நாளான இன்று ஆட வந்த முதல் ஆட்டக்காரர் வார்னர் 60 ரன்களில் வெளியேறினார். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் அடித்தனர். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 72 ரன்கள் அடித்தார். டெஸ்ட் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்மித் அவர்கள் இந்த போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தினார். மோயின் அலி அவர்கள் அசத்தலான பந்துவீச்சில் ஹெட் மற்றும் ஸ்மித்தை அவுட் ஆக்கினார்.
இங்கிலாந்து அணி அபார வெற்றி :
இதனால் திடீரென ஆஸ்திரேலிய அணி ஆபத்தான நிலையை அடைந்தது. அடுத்து வந்த மார்ஷ் மற்றும் ஸ்டார்க் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்த போட்டியுடன் பிராட் அவர்கள் ஓய்வை அறிவித்திருந்தார். சரியாக கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் அவரே வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ? -
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்! -
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.? -
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?