Gistak Media – Cinema News | Trending News | Latest News

Avarampoo Benefits In Tamil: ஆவாரம் பூவின் 12 மருத்துவ குணங்கள்

நமது பூமியில் நமக்கு தெரியாத எத்தனையோ மூலிகைகள் உள்ளன. அந்த வகையில் அறிய மருத்துவ குணங்களையும், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை ஆவாரம் பூ செடி. ஆவாரம் பூ செடியின் இலை, பூ, பட்டை, வேர், பிசின் போன்ற அனைத்து பகுதிகளும் மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டது. ஆவாரம் பூ செடியில் வைட்டமின்கள், அல்காய்ட்ஸ், ஸ்டிராய்ட்ஸ், மினரல்கள், தாது உப்புகள், ஆன்டிஆக்சிடண்ட் குணங்கள் ஆகியவை மிகுந்துள்ளன. இந்த ஆவாரஞ்செடியினை மருந்தாக நாம் பயன்படுத்தும் போது கிடைக்கும் முக்கிய நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

Avarampoo Benefits Lists:

1.இரத்தம் சுத்திகரிப்பு: ஆவாரம் பூ தேனீரை வாரத்திற்கு மூன்று முறை அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள், நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும்.

2.உடல் சூடு, பித்தம்: இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆவாரம் பூ தேனீரை அடிக்கடி குடிக்கும் போது உடல் சூடு குறையும், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும்.

3.கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம்: ஆவாரம் பூக்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை நன்கு காயவைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு 5 தட்டி சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயமாக செய்து தினமும் அறிந்து வரும்போது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறையும் இதய குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.  

4.கல்லீரல் பாதிப்பு: கல்லீரலை பாதுகாக்கும் சிறந்த மூலிகை ஆவாரம் பூ. இதனுடன் சீரகம் சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து தினமும் அருந்தினால் கல்லீரல் கொழுப்பு, கல்லீரல் வீக்கம் படிப்படியாக குறையும். கல்லீரலின் செயல் பாட்டையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

5.சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக பயன்படுகிறது. ஆவாரம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, வெந்தயப்பொடி, நாவல்விதை பொடி இந்த நான்கையும் சம அளவாக கலந்து கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கஷாயமாக செய்து காலை மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு குறைந்து கட்டுப்படும். சர்க்கரை சத்து இருப்பவர்களுக்கு ஏற்படும் அதிக உடல் சோர்வு, கை, கால் எரிச்சல், கால் மத மதப்பு, நா வறட்சி, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும்.

6.கருப்பை பலவீனம்: கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்த மூலிகை. ஆவாரம் பூ கஷாயத்தை தினமும் காலை வெறும்வயிற்றில் அருந்தி வந்தால் கருப்பையில் உள்ள புண்கள் ஆறும். கருப்பை கழிவுகளை வெளியேற்றும், அதிக உதிர போக்கு, மாதவிடாய் வலி, வெள்ளை படுத்தல் போன்ற பிரட்சனைகளை குணப்படுத்தும் கருப்பைகளில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும். கருப்பையை பலப்படுத்த செய்யும்.

7.சிறுநீரக பாதிப்பு: ஆவாரம் பூ தேனீர் அருந்தி வந்தால் சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க உதவும். சிறுநீர்கடுப்பு, சிறுநீர் தொற்று நீங்கும், சிறுநீரை பெருகச் செய்து, சிறு நீரகத்தில் கழிவுகள் தேங்காமல் தடுக்கும். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை  அதிகரிக்கச் செய்யும்.

8.அல்சர் பிரட்சனை: ஆவாரம் பூ, வெந்தயம், சீரகம் இந்த மூன்றயும் சம அளவாக எடுத்துக் கொண்டு பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அல்சர் பிரட்சனை, நெஞ்செரிச்சல் படிப்படியாக குணமாகும். ஆவாரம் பூ தேனீரை அருந்தி வரும்போது வயிற்று போக்கு, வயிற்று கடுப்பு குணமாகும்.

9.காய்ச்சல்: காய்ச்சல் சமயங்களில் ஆவாரம் பூ, சீரகம், சுக்கு, மிளகு போன்றவற்றை நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயமாக செய்து தினமும் அருந்தி வந்தால் காய்ச்சலின் பாதிப்புகள் குறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

10.சரும நோய்: ஆவாரம் பூ பொடியுடன் பாசி பயிறு பொடி கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள், முக கருமை, வியர்க்குரு, கொப்பளங்கள் போன்ற சரும நோய்கள் குணமாகும். முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

11.செல்கள், திசுக்கள் பாதுகாப்பு: உடலில் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரி ரேடிகள்களை வெளியேற்றும் தன்மை இந்த பூக்களுக்கு  உண்டு. ஆவாரம் பூ தேனீரை அடிக்கடி அருந்தி வந்தால் இதிலுள்ள சக்தி வாய்ந்த  ஆன்டி ஆக்சிடண்ட் குணங்கள் செல்கள், திசுக்களை பாதுகாக்கிறது.

12.புற்றுநோய்: ஆவாரம் பூக்களில் உள்ள மருத்துவ பண்புகள் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை தடுக்கும் சக்தி கொண்டவை. இந்த பூக்களை பயன்படுத்தி வரும்போது குறிப்பாக மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தொண்டை மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் போன்ற பலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது இந்த ஆவாரம் பூ செடி

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top