பெங்களூரு சார்ந்த ஆக்வையர்எக்ஸ் நிறுவனத்தால் 2026 மார்ச் 5 அன்று இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் ‘அவதார்’ (Avataar Drone) ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வானில் பறப்பதும், நீருக்கடியில் நீந்துவதும் செய்யும் புதுமையான ரோபோ அம்சம் ஆகும். ஆக்வையர்எக்ஸ் நிறுவனம் 2024-ல் கல்லூரி திட்டமாகத் தொடங்கி, இப்போது 50 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் பெற்றுள்ள திட்டமாக செயல்படுத்துகிறது.
வேகமாக வளர்ந்து வரும் ட்ரோன் தொழில்நுட்பம்
இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் முக்கியமாக இராணுவம், விவசாயம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அவதார் ட்ரோன் ஆனது இந்தியாவின் முதல் நீர் மற்றும் நிலத்திலும் பயன்படுத்தப்படும் ட்ரோன் ஆகும். இதன் வானிலும் மற்றும் நீரிலும் செயல்படும் திறன் ஆனது அபாரமானது. பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்வாஏர் X Autonomous சிஸ்டம்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆனது இதை (Avataar Drone) உருவாக்கியுள்ளது. அவதார் ட்ரோன் கடல் பாதுகாப்பு, கடல் ஆய்வு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியமான துறைகளில் பயன்படுத்தப்படும்.
அவதார் ட்ரோனின் சிறப்பு அம்சங்கள் (Avataar Drone)
- நீர் மற்றும் வானிலும் (நிலத்திலும்) செயல்படும் திறன்
- கார்பன் ஃபைபர் உடல் கொண்ட அவதார் உப்பு நீர் அரிப்புக்கு எதிரான சிறப்பு பூச்சுகள் பெற்றுள்ளது. உப்பு மற்றும் அழுக்குகள் சென்சார்களில் ஒட்டாமல் இருக்க இந்த சிறப்பு பூச்சுகள் உதவுகின்றன.
- இதில் உள்ள ஒவ்வொரு மிஷனுக்கும் ஃப்ரெஷ்வாட்டர் ரின்ஸ் முக்கியமாக செய்யப்படுகிறது. ஃப்ரெஷ் வாட்டர் ரின்ஸ் செய்வதன் மூலம் நீண்ட ஆயுள் உறுதியாகிறது.
- இதன் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்ட உடல் துருப்பிடிக்காத தன்மையால் கடல் பாதுகாப்பு, கடல் ஆய்வு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு மிகவும் உதவுகிறது.
- இந்த க்வாட்காப்டர் வேகமும் மற்றும் சப்மரீன் வலிமையும் கொண்ட அவதார் ஒரே சாதனத்தில் இரு ஊடியங்களிலும் (Avataar Drone) செயல்படும் வல்லமை கொண்டுள்ளது.
- இதன் க்வாட்காப்டர் வடிவிலான விமான அமைப்பு நீருக்கடியில் சப்மரீன் போன்று செயல்பட உதவுகிறது.
- இது சிறப்பான கண்காணிப்பு அமைப்புகள் பெற்றுள்ளது. இது நீருக்கடியில் Sonar மற்றும் DVL (Doppler Velocity Log) மூலம் 3D மேப் உருவாக்கும்.
- மங்கலான நீரில் பயன்படுத்த லெட் விளக்குகள் பெற்றுள்ளன.
- வானில் பயன்படுத்த HD கேமரா மற்றும் தெர்மல் இமேஜிங் பெற்றுள்ளது.
நீருக்கடியில் பயன்படும் வகையில் உயர் ரெசல்யூஷன் சோனார் பெற்றுள்ளது.
அவதார் ட்ரோனின் சிறந்த பயன்பாடுகள்
- கடற்படை மற்றும் கோஸ்ட் கார்ட்டுக்கு உதவுகிறது. கப்பல்களை வானிலிருந்து கண்காணிக்கிறது.
- நீருக்கடியில் அமைப்புகளை பரிசோதிக்கும் அமைப்பின் மூலம் துறைமுக (Avataar Drone) கண்காணிப்பு, பைப் லைன் பரிசோதனை மற்றும் தேடுதல்-மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
- இதன் மேற்-கீழ் மேற்பரப்பு அம்சங்கள் கண்டறியும் ஆற்றல் மூலம் தேசிய பாதுகாப்புக்கு உதவும்.
இதன் அற்புதமான ஆஃப்ஷோர் (Offshore) ஆற்றல் நீண்ட நேர கண்காணிப்புக்கு ஏற்றது.