Gistak Media

Avatar Fire and Ash : பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கும் ''அவதார் 3'' பட உலகளாவிய வசூல்.. எவ்வளவு தெரியுமா?

அவதார் படத்தின் மூன்றாவது பாகத்திற்கு அவதார் ‘நெருப்பும் சாம்பலும்’ (Avatar Fire and Ash) என தலைப்பு இட்டு படமாக்கியுள்ளார்கள். உலகத்திலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்ற டைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன்தான் இந்தத் திரைப்படத்தை இயக்கி  உள்ளார்.

டைட்டானிக் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது

ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் திரைப்படத்தை தொடர்ந்து ஏலியன் மற்றும் தி டெர்மினேட்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கிய அவதார் திரைப்படம் உலகமெங்கும் பலமொழிகளில் வெளியாகி டைட்டானிக் திரைப்படத்தின் வசூலையும் முறியடித்தது. இந்த திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை அள்ளியது. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புது உலகையே அறிமுகம் செய்தது. இந்த படம் வெளியான ஒரு குறுகிய காலத்திலேயே 3Dயிலும் நல்ல வசூலை அள்ளியது. இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இன்னும் ஐந்து பாகங்கள் வரை வெளியாகும் என அறிவித்தார்.

அவதார் 2 நீரோடு தொடர்புடைய படம்

அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆனது நீரோடு தொடர்புடையதாக (Avatr-They way of water) என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் தலைப்பிற்கு ஏற்ப படத்தின் பல காட்சிகளும் தண்ணீரில் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரவேற்பை பெற்று வெற்றியை தழுவியது.

அவதார் படத்தின் 3வது பாகம்

உலகம் முழுவதும் உள்ள மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிசம்பர் 19, 2025 அன்று அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் (Avatar Fire and Ash) படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Avatar Fire and Ash பெற்று வரும் வசூல் சாதனை

இந்தப் படத்தை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா ஆனது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.3,000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் மட்டுமே ரூ.800 கோடி வசூலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக மக்கள் மத்தியில் சிறந்த ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

Avatar Fire and Ash - Gistakmedia

Avatar Fire and Ash படத்தின் திரைக்கதை

புதிய பழங்குடியினர், ஆபத்தான கூட்டணிகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் புதிய நிலப்பரப்புகளுடன் இந்தப் படம் தொடங்குகிறது. மக்களையும் மற்றும் காட்டையும் தீயவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த திரைப்படத்தின் மையக் கருத்து. இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை நெருப்பை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. அவதார் முதல் பாகத்தில் ஜேக் சல்லி பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறி அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக முடிகிறது. அவதார் இரண்டாம் பாகம் மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லி தன்னை தாக்க வரும் பூமியைச் சேர்ந்த மனிதர்களையும், கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு வரும் நவி இன அவதாரையும் வென்று பண்டோராவைக் காப்பதாக முடிகிறது. இந்த மூன்றாம் அவதார் பாகத்தில், சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துச் செல்லவும் மற்றும் சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு ஒரு அவதார் வருகிறது.

மனிதர்களுக்கும் மற்றும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலே தொடரும் யுத்தத்தில், பண்டோராவின் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் (சாம்பல் மக்கள்) இணைகின்றனர். பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்றும் மற்றும் அவர்களுக்குள்ளும் வன்முறை, பொறாமை எல்லாம் இருக்கிறது என்றும் இந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

கண்களை விரிய வைக்கும் விஷ்வல் காட்சிகள்

விதமான வடிவங்கள், உருவங்கள், உயிரிகள், வண்ணங்கள், பிரகாசிக்கும் ஒளி வண்ணங்கள், ஆழ்கடல், என்று கண்களை விரிய வைக்கும் வியப்பு அனுபவம் தொடர்கிறது. மொத்தத்தில் குழந்தைகள் உட்பட எல்லோரும் விரும்பிப் பார்க்கும் படமாக Avatar Fire and Ash அமைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top