Ayalaan Movie Teaser Release Date : அயலான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Ayalaan Movie Teaser Release Date :
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அறிவியல் புனைகதை படமான அயலான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் தற்போது அயலான் படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் ஏலியன்ஸ் இணைந்து அயலான் டீசர் ரிலீஸ் தேதியை (Ayalaan Movie Teaser Release Date) அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிதிப் பிரச்னையால் கைவிடப்பட இருந்த அயலான், தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் முழு வீச்சில் உள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அயலான் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஏலியன்களை பின்னணியாகக் கொண்டு அறிவியல் புனைகதை ஜானரில் உருவாகியுள்ள அயலான் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கிராபிக்ஸில் படக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் முதல் ஏலியன் படமாக அயலான் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாக இருந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், தீபாவளி வெளியீட்டில் இருந்து அயலான் பின்வாங்கியது. அதன்படி அயலான் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Ayalaan Movie Teaser Release Date : இதையடுத்து ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் அயலான் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி அயலான் டீசர் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் (Ayalaan Movie Teaser Release Date) என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.கேஜேஆர் ஸ்டுடியோஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த அப்டேட்டில் அயலான் சிறப்பு போஸ்டரும் இடம்பெற்றுள்ளது.
அதில், ஏ.ஆர்.ரகுமான் அயலான் டீசருக்கு இசையமைக்க, அவருக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக இந்தப் புகைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் ஏலியன்ஸ் பொம்மை இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் AYALAAN TEASER ON OCT 6TH என்ற கேப்ஷன் கொடுத்துள்ளனர். அயலான் டீசர் ரிலீஸ் தேதி வெளியிட்டுள்ளதால் (Ayalaan Movie Teaser Release Date) சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!